மேலும் அறிய

Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் சீட்டில் உட்கார்ந்து கொண்டு அழுகிறமோ, சிரிக்கிறமோ, கைதட்டுகிறோமோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு என்ன? என நடிகை மீஷா கோஷல் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படம் பார்த்த தன்னை தற்குறி என விமர்சித்தவர்களை நடிகை மீஷா கோஷல் சரமாரியாக சாடியுள்ளார். 

ஜனநாயகன் படம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இந்த படம் பெரும் போராட்டங்களை கடந்து ஜூலை 23ம் தேதி ரிலீசானது. இந்த படம் விஜயின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டதால் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து வருகின்றனர். அப்படியான பிரபல நடிகை மீஷா கோஷலும் ஜனநாயகன் படம் பார்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோவைப் பகிர்ந்த அவரைப் பார்த்து நெகட்டிவ் கமெண்டுகளை சிலர் தெரிவித்தனர். இதனால் கொதித்தெழுந்த மீஷா கோஷல் கடுமையாக கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mishaa Ghoshal (@meesha.ghoshal)

காரணம் இல்லாமல் வெறுப்பது ஏன்?

அதில், “எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. உலகில் அத்தனை ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் யாரை பிடிக்க வேண்டும், யார் படங்களைப் பார்க்க வேண்டும், பார்க்கக்கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது தனிப்பட்ட விஷயமாகும். ஆனால் தளபதி விஜயை பின்பற்றும் எங்களை வெறுப்பது என்ன காரணம் என புரியவில்லை. அப்படி என்ன தவறு செய்து விட்டோம். நாங்கள் 2024ம் ஆண்டு ஜனநாயகன் படம் அறிவிப்பு வெளியானதில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் அபிமான நடிகரின் படம் வந்ததால் தியேட்டருக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறோம். 

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் சீட்டில் உட்கார்ந்து கொண்டு அழுகிறமோ, சிரிக்கிறமோ, கைதட்டுகிறோமோ எதுவாக இருந்தாலும் உங்களுக்கு என்ன?.. உங்களுக்கு பார்க்க பிடிக்கவில்லை என்றால் ஜனநாயகன் படத்துக்கு செல்லாதீர்கள். யார் உங்களிடம் போக சொல்லி கெஞ்சியது. ஏன் தேவையில்லாமல் சமூக வலைத்தளப் பதிவுகளில் கமெண்டுகளை வெளியிடுகிறீர்கள். 

Also Read: முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?

நான் யார் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன?.. விஜய் தவிர வேறு எந்த ஹீரோவின் படம் பார்த்தால் இப்படி திட்டியிருப்பீர்களா?.. கமெண்டுகளின் அன் ஃபாலோ, தற்குறி என சொல்கிறீர்கள். குழந்தைக்கு கூட உங்களை விட சிறந்த அறிவு இருக்கும். வாழு, மற்றவரை வாழ விடுங்கள். இப்படியெல்லாம் இருப்பவர்கள் தயவு செய்து என் சமூக வலைத்தளப் பக்கத்தை பின் தொடர வேண்டாம். என் பணத்தில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைப் பற்றி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 

நீங்க நீட் போராட்டம் பற்றி பேச வேண்டுமா போய் பேசுங்கள். இன்ஸ்டாகிராமில் பொய்யான ஐடி மூலம் பேசாதீர்கள். மற்றவர்களை கேள்வி கேட்காதீர்கள். இந்த செயலை நிறுத்துங்கள். உங்களுக்கு தேவையானதை மட்டும் பாருங்கள். கொஞ்சமாவது அறிவு சார்ந்து நடந்துக் கொள்ளுங்கள். நான் ஜனநாயகன் படத்தை கொண்டாடினால் தற்குறி சொல்கிறீர்களே.. லூசா நீங்கள்.. கொஞ்சமாவது வளருங்கள் என மீஷா கோஷல் தெரிவித்துள்ளார். 


 

Advertisement

தலைப்பு செய்திகள்

Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
Mishaa Ghoshal: லூசா நீங்க.. நான் ஜனநாயகன் பார்த்தா உங்களுக்கு என்ன?.. கொந்தளித்த மீஷா கோஷல்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Embed widget