அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
காந்தியும் அம்பேத்கரும் குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கான தலைவர்கள் கிடையாது. இந்தியாவிற்கான தலைவர்கள்- ஆர்.கே செல்வமணி
காந்தியும் , அம்பேத்கரும் என்ற குறும்படம்
சென்னை கொடுங்கையூர் பகுதியில் ஆர்.கே செல்வமணி இயக்க உள்ள காந்தியும் அம்பேத்கரும் என்ற குறும்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இதில் ஆர்.கே செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டு பூஜையை தொடக்கி வைத்தார். இந்த குறும்படத்தை லலிதா என்பவர் தயாரிக்கிறார்.
பூஜையின் முடிவில் ஆர்.கே செல்வமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் ;
கடந்த 10 வருடங்களாக நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. எனக்கு ஏற்றார் போல் இருந்தால் மட்டுமே படங்களை இயக்குவேன். தற்போது குறும்படம் ஒன்றை இயக்க உள்ளேன் அதற்கான பூஜை தான் இன்று நடைபெற்றது.
காந்தியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் இந்த குறும்படம் வரவுள்ளது. இந்த கால கட்டத்தில் காந்தியும் அம்பேத்கரும் தேவை என்பதை வலியுறுத்தி இந்த குறும்படத்தை இயக்க உள்ளேன்.
ஒரு ஜாதிக்கோ , ஒரே மாநிலத்திற்கோ சொந்தகாரர்கள் இல்லை
இவர்கள் இருவரும் எந்த ஒரு ஜாதிக்கோ எந்த ஒரு மாநிலத்திற்கோ சொந்தக்காரர்கள் இல்லை. இந்தியாவிற்கன தலைவர்கள். இங்கு எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி இல்லை எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதியில்லை. அதனால் ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
தலித்களுக்காக போராடவில்லை
காந்தியும் அம்பேத்கரும் தலித்களுக்காக போராடினார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் இந்தியர்களுக்காக போராடினார்கள் என்று தான் கூற வேண்டும் என தெரிவித்தார்.
திரையரங்கு டிக்கெட் கட்டணம்
திரையரங்குகளில் டிக்கெட் விலை சாதாரண திரையரங்கு மற்றும் குளிர்சாதன திரையரங்கு டிக்கெட் விலை தனித்தனியாக உள்ளது.1000 ரூபாய் கொடுத்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள் , 200 ரூபாய் கொடுத்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். 50 ரூபாய் கொடுத்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். குறைவான விலை கொடுத்து பார்ப்பவர்களுக்கென தனியாக திரையரங்கு கட்டினால் அதில் வந்து அவர்கள் பார்த்து கொள்வார்கள். அதிவிலை கொடுத்து பார்ப்பவர்கள் தனியாக பார்ப்பார்கள்.