மேலும் அறிய

நான் படத்துக்காக உழைக்கவில்லையா...திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டிற்கு ஆர் ஜே பாலாஜி விளக்கம்

கருப்பு படத்தின் ரிலீஸ் பிரச்சனையில் ஆர் ஜே பாலாஜி உதவவில்லை என்கிற திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு வைத்த நிலையில் ஆர் ஜே பாலாஜி அவருக்கு விளக்கமளித்துள்ளார்

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் கடன் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இந்த பிரச்சனையின் போது சூர்யா தவிர கருப்பு படக்குழு சார்ந்து யாரும் உதவ முன்வரவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். குறிப்பாக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி காரில் அழுது வீடியோ வெளியிட்டது தவிர வேறு எந்த உதவியும் செய்யவில்லை என அவர் பேசியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து கருப்பு பட இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தற்போது விளக்கமளித்துள்ளார்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஜஸ்வந்த் பண்டாரி உள்ளிட்ட சிலர்  இப்படத்திற்கு பைனான்ஸ் செய்திருந்தார். அவர்களுக்கு சேர வேண்டிய 100 கோடி கடனை திருப்பி கொடுத்தால் மட்டுமே கருப்பு படத்தை வெளியிட முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் கருப்பு படத்தின் ரிலீஸ் மே 14 அன்று தடைபட்டது. திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட சிலர் இப்படத்தை வெளியிட கடன் வழங்கினார்கள். அதே நேரம் நடிகர் சூய்ரா  முன்வந்து தனது சம்பளத்தை வழங்கி உதவியதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆர் ஜே பாலாஜி மீது திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு 

கருப்பு படத்தின் ரிலீஸ் தடைபட்டது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியிருந்தார். அப்போது அவர் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தார். கருப்பு படத்தின் ரிலீஸ் தடைபட்டபோது காரில் இருந்து ஆர் ஜே பாலாஜி அழுது வீடியோ வெளியிட்டார். ஆனால் களத்தில் பிரச்சனையை சரிசெய்ய அவர் எந்த உதவியும் செய்யவில்லை என அவர் கூறியிருந்தார். அதே நேரம் படம் வெற்றிபெற்றதும் ஆர் ஜே பாலாஜி காலரை தூக்கி விட்டு சுத்தினார் என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து ஆர் ஜே பாலாஜி தற்போது விளக்கமளித்துள்ளார்

ஆர் ஜே பாலாஜி பதில்

இதுகுறித்து ஆர் ஜே பாலாஜி கூறுகையில் " இந்தப் படத்தின் திரைக்கதையை நான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எழுதினேன். என் குடும்பத்தினருடனும் தயாரிப்பாளரின் குடும்பத்தினருடனும் நான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் பங்களிப்பு சரியாக இல்லாவிட்டால், தயாரிப்பாளர் என்னுடன் மகிழ்ச்சியாக வந்திருக்க மாட்டார். அந்தத் தயாரிப்பாளர் குறிப்பிட்ட நபரை (திருப்பூர் சுப்பிரமணியன்) அழைத்து, "ஏன் சார் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.

ஒரு இயக்குநராக, எழுத்தாளராக மற்றும் நடிகராக, நான் மிகுந்த நேர்மையுடன் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் சூர்யா சார் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஒட்டுமொத்தக் குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருப்பூர் சுப்பிரமணியனுக்கோ, ஈரோடு மகேஷுக்கோ அல்லது மதுரை முத்துக்கோ இது பிடித்திருக்கிறதா என்பது எனக்கு முக்கியமல்ல; மக்களுக்கு இது பிடித்திருக்கிறது.

அவர் ஒரு பெரிய மனிதர்; அவர் தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார். என் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . அவர்கள் நல்ல லாபம் ஈட்டியுள்ளனர். நான் கடினமாக உழைத்தேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். அதுதான் சரியானதும் கூட. நாங்கள் அதிலிருந்து பலனை அடைந்தோம் . அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்." என தெரிவித்துள்ளார் 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget