மேலும் அறிய

''இஷ்டத்துக்கு பொய்யி.. தனியா விடுங்க சிஸ்டர்!'' பஞ்சாயத்தான ஊர்வசி பேட்டி! கடுப்பான பண்ட்!

சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் பேசிய ஊர்வசி, எனக்காக ஒருவர் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார் என்றார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் நடிகர்களுக்கும் இடையே கிசுகிசுக்கள் வருவது புதிதல்ல. சில நேரம் கிசுகிசுக்கள் உண்மையாகி திருமணம் வரையிலும் செல்கிறது. விராட்கோலிதான் சமீபத்திய எடுத்துக்காட்டு. அந்த வரிசையில் தற்போது ரிஷப்பண்ட் இணைந்துள்ளார். ஆனால் இது காதல் கிசுகிசு அல்ல. சோஷியல் மீடியா சண்டை.

2018ம் ஆண்டே ரிஷப்பண்டும், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையே காதலென கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வருவதாக கூறப்பட்டது. பின்னர் ஊர்வசி நம்பரை ரிஷப்பண்ட் வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. அதற்குப்பின் இந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. இந்நிலையில் ஊர்வசிகொடுத்த ஒரு நேர்காணல் மீண்டும் இந்தப்பிரச்னையை புகைய வைத்துள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் பேசிய ஊர்வசி, எனக்காக ஒருவர் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார் என்றார். மேலும் யார் அது எனக்குறிப்பிடாத ஊர்வசி, “RP'' எனக்குறிப்பிட்டு சொன்னார். ரிஷப்பண்டைத்தான் அவர் சுருக்கு “RP” என்கிறார் என பலரும் இது தொடர்பாக குறிப்பிட்டு வந்தனர். அந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் இது குறித்து ரிஷப் பண்ட் ரியாக்ட் செய்துள்ளார். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டுள்ள ரிஷ்ப், ‘தலைப்புச் செய்தியில் வரவேண்டுமென்றும், அற்ப புகழுக்காகவும் சிலர் நேர்காணல்களில் பொய்களை அள்ளி வீசுகின்றனர். புகழ் தாகத்துக்காக சிலர் இப்படி இருப்பது உண்மையில்வருத்தமாக இருக்கிறது. அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'என்னை தனியாக விடுங்கள் சகோதரியே' எனவும், 'பொய்யுக்கும் ஒரு அளவுண்டு' என்றும் ஹாஸ்டேக் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தை பெற்றவர் இவர்.

அதுமட்டுமின்றி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் சமீபத்திய பேட்டிகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இவர் தனக்கு வந்த திருமண ப்ரபோசல் குறித்து சமீபத்தில் பேசியதும் வைரலானது. நேர்காணல் ஒன்றில் பேசிய ஊர்வசி, எகிப்தியன் பாடகர் ஒருவர் எனக்கு திருமணத்துக்காக ப்ரபோஸ் செய்தார். கலாச்சார வேறுபாடு காரணமாக நான் முடியாது எனக் கூறிவிட்டேன். அந்த பாடகருக்கு ஏற்கனெவே இரண்டு மனைவிகள் உள்ளனர். 4 குழந்தைகள் உள்ளனர். எனக்கு நிறைய திருமணம் ப்ரபோஸ் வந்துள்ளது’’ என்றார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget