மேலும் அறிய

Veeran: சூப்பர் ஹீரோ கதைக்களத்துடன் ரிலீசாகும் ‘வீரன்’ .. தமிழில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்களின் நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படமாக “வீரன்” படம் வெளியாகவுள்ள நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ வகையிலான படங்களை காணலாம். 

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படமாக “வீரன்” படம் வெளியாகவுள்ள நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ வகையிலான படங்களை காணலாம். 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்கள் என்றாலே சூப்பர் பவர்களை கொண்ட  ஹீரோக்களாக காட்டப்படுவார்கள். அவர்கள் மற்றவர்களை விட பலம் அதிகம், திறமையானவர்கள் என்பது எழுதப்படாத விதி. ஆனால் ஹாலிவுட் படங்களில் வருவது போல சமூகத்தை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ படமெல்லாம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வரும். அந்த வகையில் கடந்த காலங்களில் வெளியான படங்களும் அவற்றின் விமர்சனங்களையும் காணலாம்.

கந்தசாமி

சூப்பர் ஹீரோ படங்களுக்கு முன்னோடி என “கந்தசாமி” படத்தை சொல்லலாம். 2009 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் முதலில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது. பின்னர் விக்ரம் ஹீரோவாக நடித்தார். தாணு தயாரித்த இப்படத்தை சுசு கணேசன் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் ஸ்ரேயா ஹீரோயினாக நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். பணக்காரர்களிடம் இருந்த கருப்பு பணத்தை கொள்ளையடித்து அதனை ஏழை மக்களுக்கு கொடுக்கும் பழைய கதையை சூப்பர் ஹீரோ ஸ்டைலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கியிருந்தார்கள். ஆனால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 

முகமூடி 

வித்தியாசமான கதைகளை உணர்வுப்பூர்வமாக இயக்கும் மிஷ்கின் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “முகமூடி”. ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், செல்வா,நாசர், கிர்ஷ் கர்னாட், அனுபமா குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கே இசையமைத்த இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியது. ஆனால் திரைக்கதை சொதப்பிய காரணத்தால் இப்படம் படுதோல்வி அடைந்தது. 

ஹீரோ

அடுத்ததாக சூப்பர் ஹீரோ கேரக்டராக சிவகார்த்திகேயன் மாறினார். 2019 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. சூப்பர் ஹீரோ படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் திரைக்கதை சொதப்பல்கள் காரணமாக படம் வெற்றியடையவில்லை. 

வீரன்

இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் “வீரன்”. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஆதிரா,காளி வெங்கட், முனீஸ்காந்த், வினய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி வருகிறது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ படம் என ஹிப்ஹாப் ஆதி குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், சூப்பர் ஹீரோ படம் என்றாலே தமிழில் தோல்வி தான் என்ற நிலைமையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget