மேலும் அறிய

Vijay Meets Fans : வாரிசு பட ரிலீஸ்; மாவட்டம்தோறும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்..! பின்னணி என்ன..?

வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில் மாவட்டம் தோறும் ரசிகர்களை விஜய் சந்திப்பு மற்றும் அதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில் மாவட்டம் தோறும் ரசிகர்களை விஜய் சந்திப்பு மற்றும் அதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 

வசூல் மன்னன் விஜய்

தமிழ்நாட்டில் முன்னணி நடிகராகவும் அதிக ரசிகர்களுக்கு ஒன்று நடிகராகவும் விஜய் இருந்து வருகிறார். விஜய் நடிக்கும் படங்கள் அதிகளவு வசூல்களை குவிக்கும் என்ற நம்பிக்கையில், தயாரிப்பாளர்களும் பெரும் பொருட்செல்லில் விஜய் படங்களை தயாரிக்க முன்வருகின்றனர் .

நடிகர்கள் - அரசியல்

 கதாநாயகர்களாக நடிகர்கள் நடிகர் துவங்கிய சில படங்களிலேயே ரசிகர் மன்றங்களை தமிழ் ரசிகர்கள் உருவாக்குவது வழக்கம்,  ஏற்கனவே திரை உலகில் இருக்கும், நடிகர்கள் அல்லது இயக்குனர்களின் வாரிசாக இருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே கூட, ரசிகர் மன்றங்கள் உருவாகுவது வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரை உலகத்தில் இருக்கும், கதாநாயகர்கள் ரசிகர் மன்றங்களை, அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

தேர்தல் வெற்றி

அந்த வகையில், நடிகர் விஜய் , விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார் . விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்சி ஆனந்த் இருந்து வருகிறார். ஒருங்கிணைப்பு கூட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் ஏற்பாடு செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலுக்கு நிறுத்த நடிகர் விஜய் அனுமதி அளித்தார்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர்.

அரசியல் பரபரப்பு

வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் நேரடியாக அழைத்து, பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளப்பி இருந்தது. தொடர்ந்து விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாரான விஜய் மக்கள் இயக்கம்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமூக வலைதள பக்கங்கள் துவங்கப்பட்டது, வாரம் தோறும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு ஏதாவது, ஒரு வகையில் சேவை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு , ஒருங்கிணைக்கும் வகையில் மொபைல் செயலையும் உருவாக்கப்பட்டது. பனையூரில் உள்ள அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, பெரிய அளவில் கூட்டங்களை அலுவலகத்திலேயே நடத்த ஏதுவாக தயார் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, அன்றைய தினம் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களிடம் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், திரைப்படம் ஷூட்டிங் இருந்தால் அது கேன்சர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

ரசிகர்களை சந்திக்கும் விஜய்

விஜய் தனது ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ரசிகர்களை நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தார். அவ்வப்பொழுது குறிப்பிட்ட ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்த நிலையில், மாவட்ட வாரியாக இருக்கும் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை 9:30 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு நாமக்கல் சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இதர அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாவட்ட நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்கான ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அனுமதி அட்டை கொடுக்கப்பட்டு, அனுமதி அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் இருக்கும் ரசிகர்களை நேரடியாக, சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த வாரங்களில் பிற மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படம் சர்ச்சை

விஜய் தற்போது அவர் வாரிசு என்ற படம் நடித்து முடித்துவிட்டு பொங்கல் என்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தெலுங்கு சங்கம் பிற மாநில படங்களை முக்கிய தினத்தன்று வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget