மேலும் அறிய

ராஜேஷ் குமார் நாவலைத் தழுவி உருவாகியுள்ள இணையத் தொடர் 'ரேகை' விமர்சனம்

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் 'ரேகை' இணையத் தொடர் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

தினகரன் இயக்கத்தில் பால ஹாசன், பவித்ரா ஜனனி, சந்தியா, வினோதினி வைத்தியநாதன், வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், இ.இந்திரஜித், எம்.ஸ்ரீராம், பூபாலம் பிரகதேஷ் ஆகிய பலர் நடித்துள்ள இணையத் தொடர் ரேகை. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் இந்த தொடர் நவம்பர் 28 ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பான புலன் விசாரணை , மர்மங்கள் என சுவாரஸ்யமான கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ரேகை இணையத் தொடரின் விமர்சனம் இதோ

ரேகை இணையத் தொடர்  விமர்சனம் 

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்குக் கூட கைவிரல் ரேகை வேறுபட்டதாக இருக்கும். ஆனால் இங்கு நான்கு பேருக்கு ஒரே மாதிரியான கைவிரல் ரேகை இருப்பது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலா ஹாசனின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த ரேகை குறித்து விசாரணை தொடங்கிய அவர், தொடர்புடைய நான்கு பேரும் இறந்துவிட்டார்கள் என்ற தகவலை அறிகிறார். மருத்துவ அறிக்கை அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக கூறினாலும், பின்னணியில் ஏதோ சரியில்லை என்று பாலாவுக்கு தோன்றுகிறது. தொடர்ந்து தேடிச்செல்லும் போது, நான்கு பேரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.

எந்த தடயமும் விடாமல், பிரேத பரிசோதனையைக் கூட ஏமாற்றும் வகையில் நடந்த இந்தக் கொலையின் பின்னால் யார் இருக்கிறார்கள் ? ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? அவர்களுக்கெல்லாம் ஒரே கைவிரல் ரேகை இருப்பது எப்படி? — என்பதற்கான பதில்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லும் தொடர்தான் ‘ரேகை’.

‘விடுதலை’ படத்தில் கவனத்தைப் பெற்ற பாலா ஹாசன், இக்கதையின் நாயகனாக சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிர்களை அவிழ்க்கும் புத்திசாலித் தனமும் கம்பீரமும் கொண்ட கதாபாத்திரமாக சிறப்பாக பொருந்தியிருக்கிறார் பாலா. கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் பவித்ரா ஜனனி நன்றாக நடித்திருக்கிறார் என்றும் நாயகன் நாயகி காதல் கதைக்கு பெரியளவில் பலம் சேர்க்கவில்லை. 

முக்கியமான பாத்திரத்தில் வினோதினி கவனம் ஈர்த்துள்ளார். பல புதிய முகங்களும் தங்களது காட்சிகளை உயிரூட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ் பிரதாபின் பின்னணி இசை புலனாய்வு காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம். ஹெண்ட்ரி, பல்வேறு கோணங்களில் காட்சிகளை அமைத்து பார்வையாளர்கள் கவனத்தை சிதறவிடாமல் தக்கவைத்திருக்கிறார். 

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடரை  எழுதி இயக்கிய எம். தினகரன், எதிர்பாராத திருப்பங்களும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும் கொண்ட ஒரு புதிய புலனாய்வு அனுபவத்தை கொடுத்திருக்கிறார். 6 எப்பிசோட்களையும் ஒரே தடவையில் பார்த்தாலும் சலிப்பில்லாத ஓட்டம். ஒவ்வொரு எப்பிசோடும் புதிய சம்பவம், அதனால் உருவாகும் மர்மம், அதை அவிழ்க்கும் நாயகனின் விசாரணை என்று தொடரை உற்சாகமாக நகர்த்தியிருக்கிறார் தினகரன். கொலை சம்பவங்களை அறிவியல் கூறுகளுடன் இணைத்தது கூடுதல் சிறப்பு. கிரைம் திரில்லர் என்றாலும், குடும்பத்துடன் கூட பார்க்க வேண்டிய தொடராக அமைத்திருக்கிறார். பல சம்பவங்களை இணைத்து ஒரு வலுவான கதையாக கட்டியமைத்த தினகரன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தத்தில், ‘ரேகை’ — அதிர்ச்சி, ஆச்சரியம், சுவாரஸ்யம் நிறைந்த ஒரு நல்ல புலனாய்வு தொடராக அமைந்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Embed widget