ஹ்யூமர் சென்ஸில் அசத்தும் ரவி மோகன்...யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படத்தின் கலக்கல் ப்ரோமோ
An Ordinary Man : ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதை நாயகனாக நடித்துள்ள 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது

நடிகர் ரவி மோகன் அண்மையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸை தொடங்கினார். இதன் துவக்கவிழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக இருக்கும் 10 படங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டார். இதில் அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படமும் ஒன்றாகும். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் அவதாரமெடுக்கும் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளில் தான் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரவி மோகன் தயாரித்து இயக்கி யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் An Ordinary Man படத்தின் முன்னொட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னதாக ரவி மோகன் , எஸ் ஜே சூர்யா இணைந்து நடிக்கும் ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வெளியாகி பெரியளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதே போல் தற்போது 'ஆன் ஆர்டினரி மேனின் ' ப்ரோமோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ப்ரோமோவில் யோகிபாபுவை வைத்து தான் ஒரு படம் இயக்கவிருப்பதாக சொல்கிறார் ரவி மோகன். படம் முழுவதும் நீங்கதான் வருவீங்க ஆனால் கேரக்டர் தான் இன்னும் மாட்டல என சொன்னதும் யோகி பாபு ஷாக் ஆகிறார். ஒவ்வொரு காஸ்டியூமாக யோகி பாபு மாட்டிவர தனக்கான கதாபாத்திரத்தை தேடுகிறார் ரவி மோகன். ஆனால் எதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியில் ஒரு பனியனும் லுங்கியும் கட்டி வருகிறார் யோகி பாபு. அதை பார்த்த ரவி மோகன் ஒரு சாதாரண மனிதனின் கதையை விட சுவாரஸ்யமானது வேறு என்ன இருக்கிறது என படத்தின் டைட்டிலை அறிவிக்கிறார்கள். யோகி பாபு ரவி மோகன் கோமாளி படத்தில் இணைந்து நடித்துள்ளதை நாம் ரசித்திருக்கிறோம். தற்போது ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு என்கிற ஐடியா புதுமையானதாகவும் ரசிகர்களை கவரக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கேற்றபடி இந்த ப்ரோமோவும் அமைந்துள்ளது. நிச்சயமாக முழுக்க முழுக்க காமெடி , செண்டிமெண்ட் கலந்து இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்
ரவி மோகன் தற்போது கராத்தே பாபு , ஜீனி , ப்ரோகோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகவும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






















