”ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கையா?" : அவங்களே ஷேர் பண்ண க்யூட் விஷயம், இங்க இருக்கு..
ராஷ்மிகா தனது பதிவில் “ மந்தனா குடும்பம் “ என குறிப்பிட்டதில் இருந்தே அவர்தான் தனது குடும்பத்திற்கு பக்க பலமாக இருக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது
தென்னி்ந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவிற்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். “நேஷ்னல் கிரஷ்“ என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகிறார் ராஷ்மிகா . புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி என்ற ஒற்றை பாடல் மூலம் , தன்னுடைய கெரியரையே கிடு கிடு என உயர்த்திவிட்டார் ராஷ்மி. தற்போது தமிழ்,தெலுங்கு , இந்தி என பன்மொழி படங்கள் , பான் இந்தியா படங்கள் பலவற்றை கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்கள் செம ஆக்டிவ்.
View this post on Instagram
அவ்வப்போது தனது உடற்பயிற்சி வீடியோ, ஃபோட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்கள் , சினிமா அப்டேட் அனை அனைத்தையுமே தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா தனது குடும்பத்தினர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக “இதுதான் மந்தனாவின் குடும்பம்...எனக்கு அப்படி சொல்ல பிடிச்சுருக்கு.. இதுதான் நாங்க... நீங்கதான் எங்கள் முகத்துல இந்த சிரிப்பை கொண்டு வந்தீங்க..எங்கள் குடும்பமும் உங்களை நேசிக்கும் “ என தெரிவித்துள்ளார். புகைப்படத்தில் ராஷ்மிகாவின் அம்மா, அப்பா, மற்றும் குட்டி தங்கை இடம்பெற்றுள்ளனர். ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கையா என வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்..
View this post on Instagram
ராஷ்மிகா தனது பதிவில் “மந்தனா குடும்பம் “ என குறிப்பிட்டதில் இருந்தே அவர்தான் தனது குடும்பத்திற்கு பக்க பலமாக இருக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது.ராஷ்மிகா பிஸியாக நடித்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும் தவறுவதில்லை. சமீபத்தில் ஊட்டிக்கு தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார். அங்கு தனது குடும்பத்துடன் சிறுது நேரம் செலவிட்டுருக்கிறார்.ராஷ்மிகா நடிகர் விஜய்யின் 66 வது படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் செம வைரலானது. அதனை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் , புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மானின் இரண்டு படங்களில் கேமியோ ரோலிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.