மேலும் அறிய

Rashmika Mandanna: ராஷ்மிகாவுக்கு இந்த கதியா? புஷ்பா 2 படத்தை அனிமலோடு கோர்த்து விட்டு அதகளம் பண்ணும் ரசிகர்கள்!

புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்த ட்ரைலரை அனிமலோடு ஒப்பிட்டு பேச துவங்கி உள்ளனர் நேஷ்னல் கிரஷ்ஷின் ரசிகர்கள்.

புஷ்பா 2:

சுகுமாரின் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, நடிப்பு அசுரன் பகத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ்  உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்டர்நேஷனல் அளவிற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. 

அல்லு அர்ஜுன்:

பீகார் மாநிலம் பாட்னாவில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு நடத்தப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி நடைபெற்ற காந்தி மைதானமே நிரம்பி வழியும் அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இதில் பங்கேற்றனர். இதனால் அல்லு அர்ஜுனின் ஸ்டார் வேல்யூ ஒரே நாளில் ஓஹோவென கூடியிருக்கிறது. 

ராஷ்மிகா ரசிகர்கள்:

ஆனால் அதே சமயம், புஷ்பா 2 டிரெய்லரைப் பார்த்து ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் தான் மனக்குமுறலில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வாங்காவின் பிளாக்பஸ்டர் ஃபேமிலி க்ரைம் மூவியான அனிமலில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இதில் அப்பா மீது அளவுக்கு அதிகமான பாசம் கொண்ட கனவனாக வரும் ரன்பீர் கபூர், ராஷ்மிகாவிடம் சைக்கோ கணவர் போல் நடந்துகொள்வார். 

அனிமல் திரைப்படம்:

குறிப்பாக தனது தந்தையைப் பற்றி ஏதாவது பேசினாலே ராஷ்மிகா மந்தனாவை அடித்து துன்புறுத்துவார். ஆனால் அடுத்த நிமிடமே காதல் வழிய டைலாக் பேசுவார். இதனாலேயே இந்த படத்தில் ரன்பீர் கபூர் கேரக்டர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

புஷ்பா 2 ட்ரைலர்:

நேற்று வெளியான புஷ்பா 2 ட்ரெய்லரில் ராஷ்மிகா மந்தனாவின் கால்களை பிடித்து அல்லு அர்ஜுன் தனது தாடியைத் தடவி புஷ்பா ஸ்டைலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

அத்துடன் , “கணவன் தன் மனைவி சொல்றதைக் கேட்டால் என்ன நடக்குன்னு இந்த உலகம் பாக்கப்போகுது” என்ற டைலாக் வேறு வருகிறது. ஆனால் புஷ்பாவின் இந்த சைகை ஸ்ரீவள்ளியை கடுப்பேற்றியது போல தான் ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன்கள் இருந்தது. இதை ராஷ்மிகாவின் ரசிகர்கள் நோட் செய்ய தவறவில்லை. 

ராஷ்மிகாவை நினைத்து புலம்பும் ரசிகர்கள்:

இந்த காட்சிகளை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வரும் ரசிகர்கள்,  “அது என்ன ஆன் ஸ்கிரீனில் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு நல்ல கணவர் கிடைக்கமாட்டேங்கிறாங்க... இப்படி விநோதமான ஆட்களாகவே மாட்டுறாங்க” என புலம்பி வருகின்றனர். 

குறிப்பாக இந்த ரெண்டு படங்களிலும் ஏழை பெண்ணான ராஷ்மிகா மந்தனா பணக்கார ஆண்களை திருமணம் செய்திருப்பார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன் ஒருவர், “ஏழை பெண்ணான அவருக்கு ஏன் நார்மலான கணவர் கிடைப்பதில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget