அமிதாப் மகளாக ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகம் - "குட் பை" திரைப்படம் அக்டோபர் 7 ரிலீஸ்
Good Bye Release date Announced : அமிதாப் பச்சன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "குட் பை" திரைப்படம் அக்டோபர் 7ம் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Good Bye latest update: அப்பாவும் அக்டோபர் 7 உங்களை சந்திக்கிறோம்... ராஷ்மிகா மந்தனா... "குட் பை" திரைப்படம் ரிலீஸ்
ஏக்தா கபூர் மற்றும் ஷிவாஷிஷ் சர்க்கார் தயாரிப்பில் இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் லீட் ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கும் "குட் பை" ஹிந்தி திரைப்படம் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா. குயின், சூப்பர் 30 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விகாஸ் பால் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சுனில் குரோவர், அபிஷேக் கான், சாஹில் மேத்தா, தீது வர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Papa aur main, aa rahe hai aapke family se milne on 7th October! 🤍🌸#Goodbye #GoodbyeOnOct7@SrBachchan @Neenagupta001 @pavailkgulati @ElliAvrRam @AshishVid @whosunilgrover #SahilMehta #GoodCo #VirajSawant #ShobhaKapoor pic.twitter.com/bNpQ7KJOS8
— Rashmika Mandanna (@iamRashmika) September 3, 2022
பாலிவுட்டில் அறிமுகமாகும் ராஷ்மிகா:
அமிதாப் நடிக்கும் "குட் பை" திரைப்படம் அக்டோபர் 7ம் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் அமிதாப் பச்சன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி முதன் முறையாக அப்பா மகளாக இணைய உள்ளார்கள். "குட் பை" திரைப்படம் ஒரு நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா "கீதா கோவிந்தம்" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் தமிழில் "சுல்தான்" மற்றும் "புஷ்பா" உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
ஓடிடி தேதி பின்னர் அறிவிக்கப்படும்:
"குட் பை" திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடியில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
I finally get to say this 🥰
— Rashmika Mandanna (@iamRashmika) July 23, 2022
My Hindi debut film - GOODBYE!🤍 with @SrBachchan sir 🔥 @Neenagupta001 ma’am 🤍 #VikasBahl
and a maaaaaad cool cast @pavailkgulati #SahilMehta#abhishek and so many such amazing actors and technicians .. 🔥❤️
Is releasing on October 7-2022 💃🏻💃🏻 pic.twitter.com/6HnxtA9891
ராஷ்மிகா போஸ்ட் :
சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவிருக்கும் ‘மிஷன் மஞ்சு’ ஹிந்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அமிதாப் சாரோடு இனைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் ராஷ்மிகா. அவரின் சந்தோஷத்தை சில சமூக வலைதளளில் பதிவுகள் மூலம் பகிர்ந்துள்ளார்.