மேலும் அறிய

Thangalaan : தங்கலான் ஆரத்தியாக நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா...என்ன காரணம் தெரியுமா?

பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் ஆரத்தி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தங்கலான்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி உள்ளிட்ட பல்வேறு  நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான தங்கலான் பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி இந்தியில் வெளியாகிய இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆரத்தியாக நடிக்க மறுத்துவிட்ட ராஷ்மிகா 

கோலார் தங்க வயல்களில் இருந்த தங்கத்தை எடுக்க நிகழ்ந்த உயிரிழப்புகள், அப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மாய யதார்த்தவாத சினிமாவாக ரஞ்சித் இப்படத்தை இயக்கியுள்ளார். திரைக்கதையில் குறைபாடுகள் இருந்தாலும் தங்கலான் படம் காட்டிய உலகம் அதன் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த குறிப்பாக மாளவிகா மோகனன் நடித்த ஆரத்தி கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று. தங்கத்தை பாதுகாக்கும் நாகர் இனத்தைச் சேர்ந்த காவல் தெய்வமாக படம் முழுவதும் ஆரத்தியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தமிழில் விஜயின் மாஸ்டர் ரஜினியின் பேட்ட போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த மாளவிகா மோகனன் இப்படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதல் தேர்வாக ராஷ்மிகா மந்தனா இருந்ததாகவும் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டதால் மாளவிகா மோகனன் நடித்தார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரத்தி  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் இயக்குநர் ரஞ்சித் ராஷ்மிகா மந்தனாவை அணுகியுள்ளார். ஆனால் ராஷ்மிகா மந்தனா அப்போது அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் என்பதால் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

இதனால் இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரத்தியாக மாளவிகா மோகனன் சிறப்பாக நடித்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒருவேளை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடித்திருந்தால் அது அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் .


மேலும் படிக்க : பிரிஞ்சு மூணு வருஷமாச்சு.. டேட்டூவை ஏன் அழிக்கல? சமந்தா - நாக சைதன்யா கொடுத்த பதில் என்ன?

Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!

தலைப்பு செய்திகள்

Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget