Ranbir - Alia: 1 வயசிலே ரூ.250 கோடி சொத்து! பாலிவுட்டின் பணக்காரக் குழந்தையாக உருவெடுத்த ரன்பீர் - ஆலியா மகள்!
பாலிவுட் தம்பதியினர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தங்களது மகள் பெயரில் 250 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கியுள்ளார்கள்.
250 கோடி மதிப்புள்ள வீட்டை தங்களது மகள் பெயருக்கு மாற்றுவதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தை என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ராகா கபூர்.
ரன்பிர் ஆலியா ஜோடி
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பாலிவுட்டின் பிரபல கபூர் குடும்பத்துக்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த 2022 ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி இறுதியில் தாயானார். தங்களது பெண் குழந்தைக்கும் ராகா கபூர் என்று இந்த தம்பதியினர் பெயரிட்டார்கள்.
ஆலியா - ரன்பீர் இருவரும் கடந்த ஆண்டு நடித்த படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியாவாடி படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசி விருதை வென்றார். அதே நேரத்தில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதை வென்றார்.
250 கோடி மதிப்புள்ள பங்களா
குடும்பம் , வாழ்க்கை இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் இந்த தம்பதியினர் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ளனர். ரன்பீர் கபூரின் தாத்தாவான ராஜ் கபூருக்கு சொந்தமான இந்த பங்களா அவரது இறப்புக்குப் பின் ரன்பீருக்கு சொந்தமாகியுள்ளது. இப்படியான நிலையில் இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர் ரன்பீர் மற்றும் ஆலியா. ஏற்கனவே பாந்த்ரா பகுதியில் இந்த தம்பதிக்கு சொந்தமாக 60 கோடி மதிப்புள்ள நான்கு அபார்ட்மெண்ட் உள்ளன. தற்போது தனது தாத்தாவின் பழைய வீட்டை 250 கோடி ரூபாய் மதிப்பில் தனது மனைவி ஆலியாவுடன் சேர்ந்து புதுப்பித்துள்ளார் ரன்பீர் கபூர்.
பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகிய இருவரின் வீடு தான் அதிக மதிப்புடையதாக தற்போது வரை இருந்து வந்தது. தற்போது ரன்பீர் கபூரின் இந்த புதிய வீடு பாந்த்ரா பகுதியில் உள்ள மற்ற பிரபலங்களின் வீடுகளைக் காட்டிலும் அதிக மதிப்புடையதாக கருதப்படுகிறது
பாலிவுட்டின் பணக்கார குழந்தை
Ranbir Kapoor and Alia Bhatt are contemplating to name their under-construction Krishna Raj Bungalow after their darling daughter Raha, thus, solidifying her status as one of Bollywood's most affluent star kids. #rk #AliaBhatt pic.twitter.com/oUAq7xPGkX
— Viral Bhayani (@viralbhayani77) March 28, 2024
250 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை ரன்பீர் மற்றும் ஆலிய தங்களது ஒரே மகளான ராகா கபூரின் பெயரில் பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பணக்கார குழந்தை என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ராகா கபூர்.