மேலும் அறிய

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி  ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
Embed widget