Rakul Preet Singh: ’நீ எனக்கு சாண்டா கொடுத்த பரிசு..’ காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரகுல்..!
Rakul Preet Singh: பிரபல நடிகை ரகுல்ப்ரீத் சிங், தனது காதலன் குறித்த அன்பு பதிவு ஒன்றை கிறிஸ்துமஸ் தினமான இன்று வெளியிட்டுள்ளார்.
ரகுல்ப்ரீத்சிங் காதலன்:
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் ஆகியோருடனும் தமிழில் கார்த்தி, சூர்யா, அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடனும் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், ரகுல் ப்ரீத் சிங்.
இது மட்டுமன்றி, பாலிவுட் உலகின் முன்னணி நடிகர்களான ஆயுஷ்மான் குரானா மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்டோருடனும் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர், ஜாக்கி பகானி என்பவரை காதலித்து வருவதாக கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தனது காதலனுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவை தற்போது வெளியிட்டுள்ளார், நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
ரகுலின் பதிவு:
கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரபலங்கள் பலரும் விதவிதமாக பல்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ரகுல் ப்ரீத் சிங்கும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
தனது காதலன், ஜாக்கி பக்னானியின் பிறந்தநாளையொட்டி, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரித் சிங். அதில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எனது அன்பே. சாண்டா எனக்கு சிறந்த பரிசாக உன்னைக் கொடுத்திருக்கிறார். எனது வாழ்க்கையில் இருப்பதற்கும், எனக்கு சந்தோஷத்தை அளிப்பதற்கும் உனக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நீ நினைப்பதையெல்லாம் நடத்தி முடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்போதும் சிரித்துக் கொண்டேயிரு” என்று குறிப்பிட்டுள்ளார்.
லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!
ரகுல் ப்ரீத் சிங்கின் பதிவிற்கு, அவரது ரசிகர்கள் பலர் லைக்ஸை அள்ளி குவித்து வருகின்றனர். பிரபலங்கள் உள்ளிட்ட பலர், ரகுலின் காதலர் ஜாக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமெண்டும் செய்து வருகின்றனர்.
விரைவில் திருமணமா?
கடந்த அக்டோபர் மாதம் ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாளின் போதே, ஜாக்கி தங்களது காதலை ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் அறிவித்திருந்தனர். இதையடுத்து, இவரகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவியது. இதனால் பயங்கர ஷாக் ஆன ரகுலின் ரசிகர்கள், இது குறித்து சமூக வலைதளத்தில் அவரிடம் கேள்வியெழுப்பிய வண்ணம் இருந்தனர்.
ஆனால், திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தியே என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், ரகுல். இந்நிலையில், மீண்டும் தனது காதலன் குறித்த பதிவு வெளியிட்டுள்ளதையடுத்து, ”ஒரு வேள சீக்கிரம் கல்யாணமாயிடுமோ..” என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்னர்.