மேலும் அறிய

Rakul Preet Singh: பாலிவுட் பிரபலத்தை கரம் பிடிக்கும் அயலான் பட நாயகி... விரைவில் டும் டும் டும்..!

Rakul Preet Singh : பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானி - நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் பிப்ரவரி 22ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது.   

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். 

 

Rakul Preet Singh: பாலிவுட் பிரபலத்தை கரம் பிடிக்கும் அயலான் பட நாயகி... விரைவில் டும் டும் டும்..!

அடுத்தடுத்து ரிலீஸ் :

இந்த ஆண்டு துவக்கமே ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மிகவும் பிரகாசமான ஒரு ஆண்டாக அமைய உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் என அடுத்தடுத்து அவரின் படங்கள் வெளியாக தயாராக உள்ளன. திரைப்பயணத்தில் வெற்றிப்பாதையை நோக்கி நகரும் ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்த நிலைக்கு முன்னேற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விரைவில் திருமணம் :

பான் இந்தியன் நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பல இடங்களில் டேட்டிங் செய்து வந்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்த கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 

Rakul Preet Singh: பாலிவுட் பிரபலத்தை கரம் பிடிக்கும் அயலான் பட நாயகி... விரைவில் டும் டும் டும்..!
நியூ இயர் ட்ரீட் :

வரும் பிப்ரவரி 22ம் தேதி, கோவாவில் திருமண விழா நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டில் கைகோர்க்கும் முதல் நட்சத்திர காதல் ஜோடிகளாக ரகுல் ப்ரீத் சிங் -  ஜாக்கி பக்னானி இருக்க போகிறார்கள்.  இவர்களின் திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி இருவரும் அவர்களின் ரசிகர்களுக்கு நியூ இயர் அன்று இந்த அற்புதமான செய்தியை வெளியிட்டு ட்ரீட் கொடுத்துள்ளார். 

களைகட்டும் பேச்சிலர் பார்ட்டி :

ஜாக்கி பக்னானி நடிப்பில் வெளியான பால்டு, ராங்கரீஸ் உள்ளிட்ட  படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தயாரிப்பாளராகவும் இருந்து வரும் ஜாக்கி பக்னானி, வெல்கம் டூ நியூயார்க், கூலி நம்பர் 1, பெல் பாட்டம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். திருமணம் நெருங்கி வருவதால் நண்பர்களுக்கு பேங்காக்கில் பேச்சிலர் பார்ட்டி  கொடுத்து என்ஜாய் செய்து வருகிறார் நடிகர் ஜாக்கி பக்னானி. மறுபக்கம் தாய்லாந்தில் தனது விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதன் புகைப்படங்களையம் சோசியல் மீடியாவில் போஸ்ட்  செய்து வருகிறார்.  
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget