Rakul Preet Singh Summoned: விடாது துரத்தும் அமலாக்கத்துறை; நெருக்கடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..பின்னணி என்ன?
போதை பொருள்,பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் பீரித் சிங்கிற்கு அமலாகத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


'ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய திரைப்படங்களால் மக்களுக்கு அதிகம் பரிட்சையமானவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ,கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் - 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2017 முதலே போதை பொருள் வழக்கில் தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி பணமோசடி மற்றும் போதை பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங் விசாரிக்கப்பட்டார். இதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத், சார்மி, ரவிதேஜா,ராணா,நவ்தீப்,ரகுல் ப்ரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இந்த நிலையில் போதைப்பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாகத்துறை இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இதற்கு முன் போதை பொருள் மற்றும் பண மோசடி வழக்கில், தெலுங்கு திரையுல பிரபலங்களை விசாரித்த அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பி இருந்தனர்; ரகுல் பிரீத் சிங் கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி இதே வழக்கிற்காக அமலாகத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















