Rakhi Sawant Arrested : சர்ச்சையாக பேசி சிக்கிய பாலிவுட் நடன கலைஞர் ராக்கி சாவந்த் கைது..
பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷெர்லின் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாடல் அழகி, பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், பாலிவுட் நடன கலைஞரான ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
BREAKING NEWS!!!
— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)🇮🇳 (@SherlynChopra) January 19, 2023
AMBOLI POLICE HAS ARRESTED RAKHI SAWANT IN RESPECT WITH FIR 883/2022
YESTERDAY, RAKHI SAWANT’S ABA 1870/2022 WAS REJECTED BY MUMBAI SESSIONS COURT
அந்த ட்விட்டர் பதிவில், “ FIR-ன் அடிப்படையில் ராக்கி சாவந்த்தை அம்போலி போலிசார் கைது செய்துள்ளனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த ராக்கி சாவந்த் ?
உத்தர பிரதேசத்தில் பிறந்த இவர், 1997 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் எண்ட்ரியானார். நடிப்பதோடு, கமர்ஷியல் படங்களில் இடம்பெறும்
டான்ஸ் நம்பர்களில் நடனமாடி வருகிறார். அத்துடன் ஆல்பம் பாடல்களில் இவர் இணைந்து நடனமாடியுள்ளார்.
பொதுவாக எல்லோரும் சின்னத்திரையிலிருந்துதான் வெள்ளித்திரைக்கு நகர்வார்கள். ஆனால், பெரிய ஸ்கீரினில் நடித்துக்கொண்டே பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்சிகளில் போட்டியாளராக பங்குபெற்றார். பிக்பாஸ் சீசன் 1, பிக்பாஸ் சீசன் 14, 15 , மராத்தி பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி கணவரைத் தேர்ந்தெடுத்த ராக்கி சாவந்தின் செயல் நாடு முழுவதும் பெரும் கவனமீர்த்தது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ரித்தேஷ் சிங் எனும் வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார். இவர்களின் திருமண பந்தம் 2022
ஆம் ஆண்டில் முறிந்தது.
View this post on Instagram
சமீபத்தில் இஸ்லாமியர் ஒருவரை மணந்து கொண்ட இவர், தனது பெயரை ஃபாத்திமா துரானி என மாற்றிக்கொண்டார். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. தன்னை எப்போதும் பேசு பொருளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் இவர், சர்ச்சையாக பேசி பல பிரச்னைகளில் சிக்குவது வழக்கம். அந்தவகையில் இம்முறை சக நடிகை ஷெர்லினிடம் சிக்கியுள்ளார். அவர் மீது தவறான வார்த்தைகளை உபயோக்கப்படுத்தியதனால் ஷெர்லின், ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில், மும்பை மாநகரத்தில் உள்ள அம்போலி பகுதியை சார்ந்த போலீசார் ராக்கி சாவந்த் கைது செய்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

