பெரிய நடிகனா வரணும்.. விஜய்க்கு வாழ்த்து சொல்லிய ரஜினி... வைரலாகும் த்ரோபேக் புகைப்படம்
Rajinkanth - Vijay throwback : நாளைய தீர்ப்பு படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட ரஜினி - விஜய் த்ரோபேக் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் ஒரு கதாநாயகனாக அறிமுகமானது 1992ம் ஆண்டு வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில்தான். அப்படத்தில் எடுக்கப்பட்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.
எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதன் பூஜை மிகவும் பிரமாதமாக நடைபெற்றது. அந்த பூஜையில் சினிமா துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்படி அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அவர் வந்ததும் அந்த அரங்கம் முழுக்க சலசலப்பு. ஒரே பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த விஜய்யிடம் சென்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லி அட்வைஸ் கொடுத்துள்ளார். "உங்கப்பா எத்தனையோ பெரிய ஹீரோக்களை உருவாக்கியுள்ளார். அதே போல உன்னையும் பெரிய ஹீரோவாக உருவாக்கிவிடுவாரு. நீயும் அதுக்கு ஏத்தபடி நல்லா கான்சன்ட்ரேஷன் பண்ணி பெரியா நடிகனா வரணும்" என மனதார வாழ்த்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
'நாளைய தீர்ப்பு' படத்தின் பூஜையின்போது நடிகர் ரஜினிகாந்த், விஜய், எஸ்.எஸ். சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் எம்.எம். ஸ்ரீலேகா ஆகியோர் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் எம்.எம் ஸ்ரீலேகா தான் 'நாளைய தீர்ப்பு' படத்தின் இசையமைப்பாளர். எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் கீரவானியின் உறவினரான எம்.எம் ஸ்ரீலேகாவுக்கு அப்போது வயது 12. 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல எம்.எம் ஸ்ரீலேகாவுக்கும் அதுதான் அறிமுக திரைப்படம்.
நடிகர் ரஜினிகாந்த் இளைய தலைமுறையினரான விஜய்யையும், எம்.எம் ஸ்ரீலேகாவையும் வாழ்த்தி எடுத்துக்கொண்ட அந்த த்ரோபேக் புகைப்படம் சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இப்படி இருந்த ரஜினி - விஜய் உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் சமீபகாலமாக யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து பரபரப்பாக நடந்தேறி வருகிறது. இது சம்பந்தப்பட்டவர்களை காட்டிலும் அவர்களின் ரசிகர்கள் இடையே தான் கடும் மோதல் நிலவி வருகிறது.