Rajinikanth on Ponniyin Selvan: ‛எம்.ஜி.ஆர், கமலால் ஏன் முடியவில்லை...’ மேடையில் ரஜினி சொன்ன ரீசன்!
நடிகர் எம்.ஜி.ஆரால் ஏன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
நடிகர் எம்.ஜி.ஆரால் ஏன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியவில்லை என்பதற்கு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் பேசும் போது, “ பொன்னியின் செல்வன் கதை ஒரு புரட்சி கதை. இப்படிப்பட்ட கதையை அப்போது இருந்த ஜாம்பாவான்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி வாசன் ஆகியோர் படமாக்க முயற்சி எடுக்க வில்லை. அதற்கு காரணமாக என்ன இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றால் இதை ஒரே படமாக எடுக்க முடியாது. அப்போது பார்ட் 1, பார்ட் 2 கான்செப்ட் தெரியாது. அதனாலத்தான் அதை எடுக்கவில்லை. இல்லையென்றால் இப்படி ஒரு மாணிக்கத்தை விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அதை தவிர எம்.ஜி.ஆர், கமலும் இதை படமாக எடுக்க முயற்சி செய்தார்கள்.
View this post on Instagram
ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணமும் இதுவாகத்தான் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து நிறைய பேர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் எடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது சுபாஷ்கரன் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். இன்னும் தமிழ் சினிமா 1000 வருடங்களை கடந்தாலும், சுபாஷ்கரன் சாதனை நினைவுக்கூறப்படும்” என்றார்.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்ந்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி, இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.