மேலும் அறிய

கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

நடிக்க வருவதற்கு முன் கொத்தமல்லி விற்று, வாட்ச்மேனாக வேலை பார்த்து தன்னுடைய திறமையால் உயர்ந்த நடிகரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நவாசுதீன் சித்திக்

அமிதாப் பச்சன் தொடங்கி ஷாருக்கான் வரை சினிமாவில் ஹிட் அடிப்பதற்கு முன்பாக மிகவும் சாதாரண வேலை பார்த்து, பல்வேறு போராட்டங்களை சந்தித்து தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்திருப்பார்கள். நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஒரு காலத்தில் கன்டக்டராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நபர் ஒருவர், இன்று பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை கோடிகளில் சம்பளம் வாங்கும் சூப்பர் வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் நவாசுதீன் சித்திக். 

கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

கொத்தமல்லி விற்பனை 

உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த நவாசுதீன் சித்திக், தனது குடும்பத்திற்காக வேதியியலாளராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் சேர வைத்தது. தனது கனவை நனவாக்க நவாசுதீன் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். பெரிய பொருளாதார வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதற்காக சில சமயம் கொத்தமல்லி விற்றும், சில நேரங்களில் வாட்ச்மேனாகவும் பணியாற்றியுள்ளார். 

இப்படி படாதபாடு பட்டு நடிப்பைக் கற்று கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தவரை பலரும் அவமதித்துள்ளனர். அவரது உருவத்தைக் கேலி செய்து “அசிங்கமான முகம் இதையெல்லாம் யாரு பார்ப்பாங்க” என கேவலப்படுத்தியுள்ளனர். இதனால் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைக்காததால், சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்துள்ளார். 

ரஜினி பட வில்லன் 

கொத்தமல்லி விற்றவர் டூ சூப்பர் ஸ்டார் பட வில்லன் - கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?

1999 இல் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர், அமீர் கான் நடித்த சர்பரோஷ் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்தார்.  இதனையடுத்து இவர் சிறிய வேடங்களில் நடித்த பிளாக் ஃப்ரைடே, தேவ் டி படங்கள் நவாசுதீனை கவனிக்க வைத்தது. 2012 இல் வெளியான கஹானி திரைப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சல்மான் கானின்  “கிக்”  படம் மூலம் சிறந்த வில்லன் நடிகராக கவனம் ஈர்த்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “பேட்ட” படத்தில் கூட வில்லனாக நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம்  வரும் நவாசுதீன், ஒரு படத்திற்கு ரூ.10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். தற்போது அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 96 கோடி ரூபாயாகும்.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget