மேலும் அறிய

Jailor : தலைகீழாய் தொங்கும் கத்தி... ‘ஜெயிலர்’ பராக்... தலைவர் 169 டைட்டில் ரிலீஸ்!

தலைவர் 169 படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின்(Thalaivar 169) தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆவதால், இந்த வருடமே அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  ‘தலைவர் 169’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 'தலைவர் 169' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி 2023 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று சிவப்பு நிறத்தில் ஸ்டார் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நாளை 11 மணிக்கு  புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்று தெரிவித்தது. இது எந்தமாதிரியான அறிவிப்பா இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்காமால், ரஜினி படத்தின் புதிய அறிவிப்புதான் இருக்கும் என்று சமூகவலைதளங்களில் கூறி வந்தனர். தலைவர் 169 படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ‘தலைவர் 169’ படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரத்தக் கறையுடன் தலைகீழாய் தொங்கும் கத்தியுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே. ‘ஜெயிலர்’ தான் தலைப்பு என்று சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த பெயர்தான் என்று தெரிந்துவிட்டது. இந்த போஸ்டர் மற்றும் தலைப்பை பார்த்த ரசிகர்கள், இந்தப் படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் நல்ல கம்பேக் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம். 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget