மேலும் அறிய

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

மங்காத்தா 2 படத்திற்கான கதையை அஜித்தை நேரில் சந்தித்து வெங்கட்பிரபு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித்குமார். அஜித் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வரை அஜித் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் நடிக்க உள்ளதாக தொடர்ந்து அறிவிப்பு வெளியானாலும், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் அடுத்து வெளியாகாமல் உள்ளது. 

அஜித் - வெங்கட்பிரபு காம்போ:

அஜித்குமாரும் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக உள்ளார். இந்த சூழலில், அஜித்குமார் மீண்டும் வெங்கட்பிரபுவுடன் கை கோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருப்பார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அஜித்தின் அசுரத்தனமான நடிப்பில் வெளியான இந்த படம் அவரது கேரியரில் தவிர்க்க முடியாத படமாக உள்ளது. இந்த படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாக ஏற்கனவே வெங்கட்பிரபு கூறியிருந்தார். 

உருவாகிறதா மங்காத்தா 2?

இந்த சூழலில், சமீபத்தில் அஜித்தை நேரில் சந்தித்த வெங்கட்பிரபு இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல இயக்குனர், நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படம், கேஜிஎஃப் இயக்குனர் இயக்கத்தில்  நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் அஜித் வெங்கட்பிரபு கூட்டணி இணைந்தால் இந்த கூட்டணி படங்கள் முடிந்த பிறகே இணைவார் என்று கருதப்படுகிறது. 

அஜித் கேட்கும் சம்பளம்:

அஜித் தற்போது சொந்தமாக கார் பந்தய அணி நடத்தி வருவதால் அடுத்த படத்திற்காக சம்பளம் அதிகளவு கேட்பதாகவும், அதன் காரணமாகவே தயாரிப்பாளர் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த சூழலில், அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர் கிடைத்தால் விரைவில் திரைப்பட பணிகள் தொடங்கும் என்று கருதப்படுகிறது. அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதைத் தயாரிப்பு மற்றும் கலைஞர்கள் தேர்வில் ஆதிக் ரவிச்சந்திரன் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்? தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget