நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் மர்மத் திருத்தம்? மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்! நடந்தது என்ன?

மேகதாது அணை விவகாரத்தில் திங்கட்கிழமை காலை அவை கூடியவுடன், "தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறோம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேகதாது அணை விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன.
புதிய நடுவர் மன்றம்
இதற்கு இடையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
— Shanmugam P (@Shanmugamcpim) June 21, 2026
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், 'அதை நாங்கள்… pic.twitter.com/6n1WLlaDcZ
உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன?
எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி கொடுத்த திருத்தம் என்ன என்று சபைக்குச் சொல்லாமல், 'அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்' என்கிற அணுகுமுறை, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது என்ன திருத்தம் என்று தெளிவாக விளக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை. எனவே, திங்கட்கிழமை காலை அவை கூடியவுடன், "தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறோம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்























