மேலும் அறிய

சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்த இரு படத்தையும் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

சத்தம் இல்லாமல் தொடங்கிய தலைவர் 173:

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குனர் அர்ஷத் மாரிமுத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில், சத்தமே இல்லாமல் அர்ஷத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

முதல் காட்சியாக பாடல் காட்சிகளை இயக்குனர் அர்ஷத் மாரிமுத்து படமாக்கியுள்ளார். இந்த காட்சிக்கான நடன அமைப்பை சாண்டி மாஸ்டர் காட்சி அமைத்துள்ளார். இந்த பாடல் காட்சிகளில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபல இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விரைவில் இணையும் ரஜினி:

இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இன்னும் 2, 3 நாட்களில் பங்கேற்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகளை விரைவாக முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் தற்போது வரை படமாக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிகாந்திற்கு விருப்பம் இல்லாத சூழலில், படப்பிடிப்பை மீண்டும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இயக்கிய ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் ஆகும். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலில், அவர் அடுத்தடுத்த படங்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்துள்ளார்.

ஷுட்டிங்கில் தீவிரமாகும் ரஜினி:

மேலும், ஜெயிலர் 2 மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளையும் தீவிரப்படுத்த ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் உள்ள கலைஞர்களின் மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமான விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget