சுந்தர் சி - குஷ்புவின் 25-வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்!

Published by: ஜான்சி ராணி

சுந்தர்.சி, நடிகை குஷ்பு தம்பதியினர் பழநி தண்டாயுதபாணி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

குஷ்பு - சுந்தர்.சி இருவரும் 25-வது திருமண நாள் கொண்டாடினர். பழநி முருகன் கோயிலில் மொட்டை அடித்து இயக்குநர் சுந்தர்.சி, குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் `மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை கடந்த வாரம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் `கேங்கர்ஸ்' திரைப்படமும் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் மூலம் சுந்தர் .சி, குஷ்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சினிமா துறையில் பணிபுரியும்போது காதலித்து திருமணம் செய்துகொண்ட குஷ்பு - சுந்தர் சி இருவருக்கும் அவந்திகா, அனந்திகா என்ற மகள்கள் இருக்கின்றனர்.

25-வது திருமண நாளில், பழனி கோயிலுக்கு சென்ற வீடியோ, புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

25-ஆண்டுகள் காதலோடு வாழக்கையில் பயணிக்கும் குஷ்பு, சுந்தர் சி.. செல்ஃபி எடுத்தபோது..
.

குஷ்பு - சுந்தர் சி காதலித்த காலமும்.. திருமணத்திற்குப் பிறகும்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள் இருவருக்கும்...

குஷ்பு இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு

` 25வது திருமண நாள் வாழ்த்துகள். நீங்களும் நானும் எப்போதும் ஒன்றுதான்! லவ் யூ சுந்தரா. சில மாற்றங்களைச் செய்து என்னுடைய திருமணப் புடவையை 25-வது திருமண நாளில் அணிந்திருப்பதைப் பெருமையாக உணர்கிறேன்.” என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.