மேலும் அறிய

Rajinikanth: ஆளை விடு சாமி.. முதல்வர் விஜய் பற்றி கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினி.. என்னவா இருக்கும்?

கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் வாழ்த்தியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் பற்றிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் எதுவும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டுச் சென்ற சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளது. இப்படியான நிலையில் விஜய் மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதனிடையே கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என ட்வீட் போட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. 

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி, விஜய் ரசிகர்களிடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. குறிப்பாக விஜய் அரசியல் கட்சி அறிவித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து முதலமைச்சர் பதவியிலும் அமர்ந்து விட்டார். ஆனால் அந்த பதவி மட்டுமல்லாமல் உயர் பதவிக்கு வர ரஜினிக்கு எல்லாவித சந்தர்ப்பமும் அமைந்தும், கட்சி ஆரம்பிப்பேன் எனவும் சொன்னார். ஆனால் கொரோனா காலக்கட்டம், தன்னுடைய விருப்பத்துக்கு நம்பி வருபவர்களின் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது என முடிவு செய்து பின்வாங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரஜினியை இன்றளவும் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஏமாற்றியதாக விமர்சித்து வருகின்றனர். 

ரஜினி நினைத்தால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் தொடங்கி மாநில முதலமைச்சர்கள் வரை பேச முடியும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக திகழ்கிறார். இப்படியான நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விஜய்க்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை முதலமைச்சர் விஜய்யின் தவெக தொண்டர்கள் கொண்டாடினர். 

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த ரஜினியிடம் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றது பற்றிய கேள்வியை நிரூபர்கள் கேட்டனர். அதற்கு பதிலேதும் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றார். இதற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வெற்ற போது வாழ்த்து சொன்னவர், முதலமைச்சராக பதவியேற்றதும் வாழ்த்து சொல்லவில்லை. அப்படி என்றால் முதலமைச்சர் விஜய்க்கு எதிரான எண்ணத்தை ரஜினி கொண்டிருக்கிறாரா என்ற கேள்விகளை பலரும் எழுப்பியுள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget