மேலும் அறிய

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!

இசைஞானி இளையராஜா இசையில் பாடிய முதல் பெண் பாடகி ஜானகி. அன்னக்கிளி படத்தில் அவர் 3 பாடல்கள் பாடியிருப்பார்.

இந்திய திரையுலகின் மிகவும் தவிர்க்க முடியாத பாடகி ஜானகி. இவர் இன்று மைசூரில் காலமானார். அவரது மறைவு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜானகி எனும் ஆளுமை:

தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களான கேவி மகாதேவன், எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் இசையில் பாடியுள்ளார். 1957ம் ஆண்டு தமிழில் பாடத் தொடங்கிய ஜானகியை எம்எஸ் விஸ்வநாதனும், இளையராஜாவுமே அதிகளவில் தங்களது இசையில் பாட வைத்தனர்.

இளையராஜாவின் முதல் பாடகி:

குறிப்பாக, தமிழ் சினிமாவின் இசையின் போக்கையே மாற்றிய இளையராஜா முதன்முதலாக இசையமைத்த திரைப்படம் அன்னக்கிளி. இந்த படத்தில் இளையராஜா-வின் முதல் பாடலான அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலைப் பாடியவர் ஜானகி ஆவார். இந்த பாடல் இந்த படத்தின் வெற்றியைக் காட்டிலும் இளையராஜா என்ற ஒரு இசையமைப்பாளரையும், தமிழ் சினிமாவின் இசை ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கப்போகிறது என்பதற்கான அடிக்கல் ஆகும். 

அப்படி தமிழ் சினிமாவின் புதிய பாதையை இளையராஜா அமைப்பதற்கு முக்கியமான வழிகாட்டியாக இந்த பாடலில் அமைந்தவர் ஜானகி. இளையராஜாவின் இசை பட்டிதொட்டியெங்கும் சென்று சேர ஜானகியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. அதே படத்தில் மச்சானா பாத்தீங்களா? பாடலும், முத்து முத்தா பாடலையும் ஜானகி பாடியிருப்பார். இந்த பாடல்களும இன்றளவும் மிகப்பெரிய வெற்றிப்பாடல்கள் ஆகும்.

பாட்டு சாம்ராஜ்யம்:

இதன்பின்னர், இளையராஜாவின் தவிர்க்க முடியாத பாடகியாக ஜானகி மாறினார். இளையராஜாவின் இசையில் 16 வயதினிலே படத்தில்  செந்தூரப் பூவே, மஞ்சக்குளிச்சி, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ராஜா எம்பார் மந்திரி எம்பார்,  கவிக்குயில் படத்தில் சின்ன கண்ணன் அழைக்கிறான், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கண்மணியே காதல் என்பது, தர்ம யுத்தம் படத்தில் ஆகாய கங்கை, ஜானி படத்தில் காற்றில் எந்தன் கீதம், அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆயிரம் தாமரை, கடல் மீன்கள் படத்தில் தாலாட்டுதே வானம், ஆட்டோ ராஜா படத்தில் சங்கத்தில் பாடாத,  மண் வாசனை படத்தில் பொத்தி வச்ச, வைதேகி காத்திருந்தாள் படத்தில் அழகு மலராட என ஏராளமான ப்ளாக்பஸ்டர் பாடல்களை பாடியுள்ளார்.

இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய தூணாக திகழ்ந்தவர் ஜானகி. கடைசியாக தமிழில் இளையராஜா இசையில் ராஜஸ்தான் படத்தில் மச்சான் என்ற பாடலை பாடியுள்ளார். இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து ஜானகி ஏராளமான காதல் பாடல்களை பாடியுள்ளார். 

தமிழில் காதல், சோகம், குத்து, கவர்ச்சி பாடல் என பாடல்களை இளையராஜா தனது இசையில் ஜானகியை பாட வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Nissan Tekton Price: நிசான் டெக்டான் வாங்கப் போறீங்களா.? அப்போ, அதோட வேரியண்ட்டுகளையும், விலைகளையும் தெரிஞ்சுக்கோங்க
நிசான் டெக்டான் வாங்கப் போறீங்களா.? அப்போ, அதோட வேரியண்ட்டுகளையும், விலைகளையும் தெரிஞ்சுக்கோங்க
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
Embed widget