இயற்கையாகவே நெய் மணம் தரும் மிளகாய்... ட்ரை பண்ணிருக்கீங்களா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மிளகாயில் பலவகை உண்டு. அதில் பலருக்கும் தெரியாத ஒன்று நெய் மிளகாய் (Ghee Chilli).

இது அதிக காரத்தன்மை கொண்டது மற்றும் தனித்துவமான சுவை கொண்டது.

இந்த மிளகாய் இயற்கையாகவே நெய்யின் மணம் மற்றும் வெண்ணெய் சுவையை தரக்கூடியது.

ஏலகிரி, மூணாறு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. ஒரு செடியில் மட்டுமே ஆறு ஏழு மாசத்துக்கு மிளகாய் கிடைக்கும்.

சாம்பார், ரசம் மற்றும் வறுவல் உணவுகளுக்கு இது சிறப்பு சுவையூட்டும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

பிரியாணி, புலாவ் போன்றவைகளில் நெய் பயன்படுத்தாமல் அதன் மணம் வர இந்த மிளகாய் பயன்படுத்தலாம்

அதிக காரமாக இருக்கும் என்பதால் இதனை குறைவாக பயன்படுத்தவும்.

நெய் மிளகாயில் உள்ள கேப்சாய்சி உடலில் ஏற்படும் வலியை குறைக்கும். செரிமான பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கிறது.

இந்த மிளகாயை பச்சையாகவோ அல்லது காய்ந்த நிலையிலோ உணவில் பயன்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் நெய் மிளகாய் சரும பிரச்னைகளுக்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.