Coolie : ரஜினியின் கூலி படத்திற்கு சவால்...அதே நாளில் வெளியாகும் பாலிவுட் நடிகரின் மெகா பட்ஜெட் படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதே நாளில் பிரபல பாலிவுட் நடிகரின் படமும் வெளியாக இருக்கிறது

கூலி
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார் சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , உபேந்திரா என பல துறை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பி அண்மையில் முடிவுக்கு வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டது
சுதந்திர தின ரிலீஸ்
அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி படம் வெளியாக இருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். லோகேஷ் ரஜினி கூட்டணி என்பது சில ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் முன்னதாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. நெல்சன் இப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து ரஜினியுடன் கூலி மற்றும் ஜெயிலர் 2 என அடுத்தடுத்து இரு படங்களை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழில் பெரிய வெற்றிப்படங்கள் அமையாத நிலையில் கூலி படம் அந்த குறையை போக்கும் என எதிர்பார்க்கலாம்
Sound-ah yethu! 📢 Deva Varraaru🔥 #Coolie worldwide from August 14th 😎 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/KU0rH8kBH7
— Sun Pictures (@sunpictures) April 4, 2025
கூலியுடன் மோதும் வார் 2
கூலி படத்திற்கு பெரிய சவால் ஒன்று உருவாகியுள்ளது. இதே நாளில் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. வார் முதல் பாகம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. தற்போது வார் 2 படத்திற்கு இந்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இரு படங்களுக்கும் முதல் வாரத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம் . அதே சமயம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறும் படமே வெற்றிபெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

