Meena Net Worth: 48 வயதில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி; மகாராணி போல வாழும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Meena Sagar Net Worth: 42 ஆண்டுகாலம் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் சாதித்து காட்டிய நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
90'ஸ் காலகட்டத்தில், முன்னணி நடிகையாக தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகவும் வெற்றிநடை போட்ட நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சிவாஜி கணேசன் அறிமுகம் செய்த மீனா:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் மீனாவை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர். ஒரு திருமணவிழாவில் மீனாவை கண்டு, 'எவ்வளவு அழகா இருக்கா இந்த குழந்தை' என நினைத்து வியந்து பார்த்த சிவாஜி கணேசன் தான் நடித்த நெஞ்சங்கள் என்ற படத்தில் ஒரு குழந்தை நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு மீனாவை ரெகமெண்ட் செய்தார். முதல் படத்திலேயே தன்னுடைய கியூட் சிரிப்பு மற்றும் அழகால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் மீனா.
20க்கும் அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்திருந்தாலும், அன்புடன் ரஜினிகாந்த் படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. ரஜினி அங்கிள்.. ரஜினி அங்கிள் என கொஞ்சி கொஞ்சி இவர் பேசும் டயலாக் அதிகம் ரசிக்க வைத்தது.
மீனா ஹீரோயினாக அறிமுகம்:
பின்னர் 'ஒரு புதிய கீதை' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மீனா, இந்த படத்திற்கு பிறகு என் ராசாவின் மனசிலே, படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்தார். இது ஹீரோயினாக அவர் நடித்த 2ஆவது படம். இந்தப் படம் கொடுத்த வரவேற்பு மீனாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
பின்னர் இதய ஊஞ்சல், இதய வாசல், எஜமான், சேதுபதி ஐபிஎஸ், ராஜகுமரன், வீரா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, கூலி, மருமகன், நாடோடி மன்னன், முத்து, வள்ளல், பாசமுள்ள பாண்டியரே, உளவுத்துறை, நாம் இருவர் நமக்கு இருவர், வானத்தை போல, பாளையத்து அம்மன், வெற்றி கொடி கட்டு, ரிஷி, சிட்டிசன், தேவன், படை வீட்டு அம்மன், அண்ணாத்த என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ரஜினிகாந்த் படங்களில் நடித்தார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அறியப்பட்ட அஜித், கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என பல நடிகர்களில் நடித்த பெருமை மீனாவுக்கு உண்டு. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் மீனா.
திருமண வாழ்க்கை:
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யா சாகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகும் கூட மீனா நடித்து வந்தாலும் தமிழில் முக்கியத்துவம் கொண்ட வேதங்கள் கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அப்படிப்பட்ட படங்கள் இவருக்கு கிடைத்தது.
விஜய்க்கு மகளாக அறிமுகமான நைனிகா:
குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த மீனா, தன்னுடைய மகள் நைனிகாவையும் தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். அன்பான கணவர், அழகிய மகள், இனிமையான குடும்ப வாழ்க்கை என மீனா வாழ்த்து கொண்டிருந்த போது தான், மீனாவின் கணவர் வித்யா சாகர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே இறந்துவிடுவோம் என்று முன் கூட்டியே தெரிந்தாலோ என்னவோ... வித்யா சாகர் தன் மீது உள்ள எல்லா சொத்துக்களையும் மீனா மற்றும் மகள் நைனிகா பெயரிலேயே எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய சேவிங்ஸ் பணம் முழுவதையும் மீனாவின் அக்கவுண்டிற்கு மாற்றிவிட்டார்.
கணவர் மரணம்:
மீனாவும் கணவர் மீது அதிகம் பாசம் வைத்திருந்த நிலையில், அவரை குணப்படுத்த லட்ச கணக்கில் பணத்தை செலவு செய்து ட்ரீட்மெண்ட் கொடுத்தார். ஆனால் கடைசி வரை நுரையீரல் தானம் கிடைக்காததால் போராடி உயிரிழந்தார். வித்யா சங்கரின் மரணம் மீனாவின் ரசிகர்களை மட்டும் அல்ல கோலிவுட் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
கணவர் மரணத்திற்கு பின்னர் வீட்டுக்குள் முடங்கிய மீனாவை, மீண்டும் வெளியே வந்து வந்தது அவரின் தோழிகள் தான். தன்னுடைய கணவர் நினைவில் இருந்து மீண்டு, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மீனாவின் சொத்து மதிப்பு:
நடிகை மீனாவுக்கு சென்னையில் 4 முதல் 5 வீடுகள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்களிலும் இன்வெர்ஸ் செய்துள்ளார். அதே போல் சொகுசு கார்கள், நகை - பணம் என எதற்கும் இவருக்கு குறைவில்லை. நடித்து கொண்டிருக்கும் போது பல இடங்களை வாங்கி போட்டாராம். அந்த இடங்களின் மதிப்பு இன்று லட்சங்களை தொடும் என்கின்றனர். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு என பார்த்தல் ரூ.40 கோடி இருக்கும் என கூறுகின்றனர். 42 இரண்டு வருடங்களாக திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ள மீனாவுக்கு இப்போது 48 வயது ஆகிறது.