Watch Video Rajinikanth: ஒழுங்கா போய் வேலைய பாரு... ரசிகரை சைகையால் மிரட்டிய ரஜினிகாந்த்... வைரலாகும் வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் ஒரு ரசிகரை சைகையால் மிரட்டிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் தான் 'ஜெயிலர்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்க உள்ளார் வேண்டும் தகவலும் வெளியானது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

முதல்முறையாக சேரும் காம்போ :
சமீபத்தில் ஜெயிலர் படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பின் படி நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணைகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.
View this post on Instagram
ரசிகருக்கு அன்பான மிரட்டல் :
அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 7ம் தேதி ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜனவரி 15ம் தேதி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மீண்டும் நேபாளத்தில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக டெல்லி வழியாக நேபாளம் செல்ல முடிவு செய்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த போது அங்கிருந்த அவரின் ரசிகர் ஒருவர் பூரித்துப் போய் 'தலைவா வணக்கம்! நிரந்தர சூப்பர் ஸ்டார்' என்றுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் உடனே சைகை மூலம் ஒழுங்கா போய் வேலைய பாரு என கூறிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் இந்த அன்பான அறிவுரை பாராட்டுகளை குவித்து வருகிறது.
#Rajinikanth's multi-starrer #Jailer - #Rajini at Jaisalmer. pic.twitter.com/Wbc65PN8AH
— VCD (@VCDtweets) January 31, 2023
ஜெய்சல்மேரில் அமோகமான வரவேற்பு :
ராஜஸ்தான் சென்ற ரஜினிகாந்திற்கு ஜெய்சல்மேர் விமான நிலையத்தில் ஆடல் பாடலுடன் அமோகமான வரவேற்பு வழங்கப்பட்டது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. இப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















