மேலும் அறிய

RRR box office collection: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் கொண்டாட்டம்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

RRR Box Office Collection: விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வசூலித்ததை விட மாஸ்டர் பட சாதனையை ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது முறியடித்துள்ளது.

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி கையில் எடுத்திருக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு  இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

ஆர்.ஆர்.ஆர். படம் தெலுங்கில் வெளியாக ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாகி ஒரு நாள் முடிவில் ரூ.60 கோடி வசூலாகி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், பாகுபலி முதல் நாள் காட்சியில் வசூல் செய்த ரூ.43 கோடி சாதனையை இது முறியடிக்கும். தெலுங்கு மாநிலங்களில் இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்.

இந்த திரைப்படம் இந்தியில் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வசூலாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேளரா போன்ற மாநிலங்களிலும் படம் வெளியாகும் முன்னரே முன்பதிவு தொடங்கியதால், நிச்சயம் பெரிய அளவில் வசூல் ஆகலாம்.

ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 7 லட்சம் டாலர்கள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253 ஆயிர டாலர் மட்டுமே வசூலித்திருந்தது. மாஸ்டர் பட சாதனையை ஆர்.ஆர்.ஆர். படம் முறியடித்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளரும் வர்த்தக ஆய்வாளருமான கிரிஷ் ஜோஹர், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய தொடக்கத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ” இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 150 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன்." என தெரிவித்துள்ளார்

ராஜமௌலி இயக்கிய  500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமான படம் என்பதால், மார்ச் 22 செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கி சுமார் 750 கோடிகள் வரை சம்பாதித்துள்ளது. இதன்முலம், ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் ஒன் படம் என்ற சாதனையை படைத்தது.கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவாளர். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget