மேலும் அறிய

Priya Bhavani Shankar | ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ரீமிக்ஸ் பாடல்... ப்ரியா பவானி ஷங்கருக்கு இந்த ரோலா?

சமீபத்தில் டிக்கிலோனா படத்தில் வெளியான ரீமிக்ஸ் பாடலான ‘காதல் மன்னனா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ் திரையுலகில் நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைகளை ஒருங்கே பெற்றவராக திகழ்பவர்  ராகவா லாரான்ஸ். முனி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் .அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அதன் பிறகு அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். காஞ்சனா சீரிஸ் என்றால் சொல்லவா வேண்டும் .

 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் படம் “ருத்ரன்”. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இப்படத்தில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.இதற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைத்து  இப்பாடலின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் டிக்கிலோனா படத்தில் வெளியான ரீமிக்ஸ் பாடலான ‘காதல் மன்னனா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது உருவாகி வரும் ‘பாடாத பாட்டெல்லாம்' பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் கோரியோகிராஃப் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

  ருத்ரன் படத்தை தவிர அதிகாரம், துர்கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ். மேலும்  பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க , நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரமுகி 2 படத்தினை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த மே  மாதமே இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படம் தள்ளிபோனது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளாராம் இயக்குநர் பி.வாசு. சந்திரமுகி 2 ஆனது அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரமுகி முதல் பாகத்தை போலவே இதிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது என  கூறப்படுகிறது. ஆனால் முதல் பாகத்தை விட இதில் த்ரில்லிங் காட்சிகளை கூடுதல் படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர். ற்போது படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதால் விரைவில் நடிகைகள் உள்ளிட்ட பிற நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  சந்திரமுகியால் பழி வாங்கப்பட்ட வேட்டையன் , எப்படி மீண்டும் அவளை பழி வாங்குகிறான் என்ற ஒன் லைனை கொண்டுதான் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியன. குறிப்பாக வேட்டையன்  கதாபாத்திரம் இதில் கொடூரமான பேயாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது . இதன் உண்மைத்தன்மை அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் நமக்கு தெரியவரும்.

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget