Radhika Sarathkumar: ‛மகளையும் பேத்தியையும் வாழ்த்திய ராதிகா சரத்குமார்’ : காரணம் இது தானாம்!
சர்வதேச பெண் குழந்தை தினமான இன்று தனது வாழ்த்துக்களை தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
உலகெங்கிலும் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மகளுக்கும் பேத்திக்கும் வாழ்த்து தெரிவித்த ராதிகா:
சர்வதேச பெண் குழந்தை தினமான இன்று தனது வாழ்த்துக்களை உலகத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கும் வகையில் தனது மகள், பேரக்குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
ராயன் திருமண வாழ்க்கை :
2016ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராதிகா மகள் ரேயான். அபிமன்யு மிதுன் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதியருக்கு தாரக் எனும் ஒரு மகனும் ராத்யா மிதுன் எனும் ஒரு மகளும் உள்ளனர். பேரக் குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் நடிகை ராதிகா சரத்குமார். அதை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது தனது பேரன் பேத்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.
ராதிகா சரத்குமார் மகள் ரேயான் :
நடிகை ராதிகா சரத்குமார் தனது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர். முதல் திருமணமும் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வர இரண்டாவதாக ரிச்சர்ட் ஹென்றி எனும் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்த பெண் குழந்தை தான் ரேயான் ஹென்றி. சில காலங்களுக்கு பிறகு பிரச்சனை காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்ற பின்னர் சில காலங்கள் தனிமையில் இருந்து பிறகு நடிகர் சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ராதிகா - சரத்குமார் தம்பதியருக்கு ராகுல் எனும் ஒரு மகன் உள்ளார். சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். தற்போது அவர் பல படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
View this post on Instagram
புகைப்படத்துடன் வாழ்த்திய ராதிகா :
சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று தனது மகளுக்கும் தனது பேத்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். வாழ்த்துடன் சேர்த்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ராதிகா சரத்குமார். பெண்கள் அன்பும் வீரமும் நிறைந்தவர்கள். அவர்களை நாம் என்றும் கொண்டாடவேண்டும் என்ற ஒரு அழகிய பதிவையும் பகிர்ந்துள்ளார்.