”அடுத்த படம் எப்போது எனத் தெரியவில்லை!” - மாதவனின் அதிர்ச்சி முடிவு..காரணம் என்ன?
முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார்.
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் ஆர் மாதவன், அடுத்த படத்தை இயக்குவது எப்போது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் படம் இயக்குவது குறித்த செயல்முறை மிகவும் சோர்வு அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார். ராக்கெட்ரி திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ள மாதவன், தனது மனைவி சரிதாவும் இப்போதைக்கு தான் நடிப்பில் கவனம் செலுத்துவதையே விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
ராக்கெட்ரி திரைப்படத்தில், திறமையான திரவ எரிபொருள் என்ஜின்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், மாதவன் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க வந்த அவர், இந்தி, ஆங்கிலம் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் குறித்துப் பேசினார்.
View this post on Instagram
மேலும் அவர் தான் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே மனைவி விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். “இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று என் மனைவி விரும்புகிறார். தன்னம்பிக்கையுடன் வெவ்வேறு ஜானர்களில் படம் எடுக்க நான் மணிரத்னம் இல்லை. நான் அதை செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. நான் மீண்டும் இயக்க வேண்டும் என்றால், ஒரு கதை உண்மையில் என்னை மனதளவில் நகர்த்த வேண்டும், ”என்று மாதவன் கூறினார்.