"23 வருட ஒற்றுமை; நேரம் எவ்வளவு விரைவாக பறக்குது" - மனம் உருகிய மாதவனின் மனைவி!
“ 23 வருட ஒற்றுமை. நேரம் எவ்வளவு விரைவாக பறக்குது....”

தமிழ் சினிமாவில் 2000 வது காலக்கட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அவர் தனது மனைவியுடன் திருமண நாளை நேற்று கொண்டாடினர்.சமூக வலைத்தளங்கள் இந்த காதல் ஜோடிகள் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் !
மாதவன் நடிக்க வருவதற்கு முன்னதாக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். தனித்திறன் வகுப்பு எடுத்த மாதவனிடம் சரிதா மாணவியாக வந்து சேர்ந்தார். தான் நினைத்த மாதிரி விமான பணிப்பெண் வேலை கிடைத்ததால் மாதவனுக்கு நன்றி சொல்லிவிட்டு , அவரை டின்னருக்கு அழைத்து சென்றிருக்கிறார். இப்படியாகத்தான் இவர்களது காதல் மலர தொடங்கியிருக்கிறது. அவர் தனது மாணவியான சரிதாவை காதலித்து கரம் பிடித்தார். இவர்களது திருமணம் கடந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு நடைப்பெற்றது. திருமணமான பிறகுதான் மாதவன் நடிக்க வந்தார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்னும் 16 வயது மகன் இருக்கிறார். அவர் சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்.இந்த நிலையில் மாதவன் - சரிதா தம்பதிகள் நேற்று (ஜூன் 6 ) தங்களது 23 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

திருமண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி !
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாளை முன்னிட்டு புகைப்படங்களை பகிர்ந்த மாதவன் “ நான் முன்பை விட இப்போது உன்னை அதிகமாக காதலிக்கிறேன். அண்ட் நான் காதலிக்க தொடங்குகிறேன்.. திருமண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி “ என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
23 வருடங்கள் ஆச்சா!
இது குறித்து பதிவிட்ட மாதவனின் மனைவி “ 23 வருட ஒற்றுமை. நேரம் எவ்வளவு விரைவாக பறக்குது. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே." என இவர்களின் சில புகைப்பட தொகுப்போடு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மாதவன் “ நான் இப்போதான் காதலிக்க தொடங்குகிறேன்.. முன்பை விட இப்போது உன் மீது பைத்தியமாக இருக்கிறேன் “ என பதிவிட்டுள்ளார்.





















