மேலும் அறிய

PVR Inox: பெரும் நஷ்டம்! 70 தியேட்டர்களை மூடும் பி.வி.ஆர். - அதிர்ச்சியில் ரசிகர்கள்

புகழ்பெற்ற  திரையரங்கு நிறுவனமான பிவிஆர் 2025 ஆம் ஆண்டில் 70 தியேட்டர்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவுக்கு பின் தியேட்டர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது கிட்டதட்ட ஓராண்டுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

நஷ்டத்தில் பி.வி.ஆர்.

மேலும் இந்த காலக்கட்டத்தில் ஓடிடி தளங்களின் பயன்பாடும் அதிகரித்த நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது. இதன் காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் வருகை என்பது பாதிக்கும் குறைவாக குறைந்து விட்டது. 

இதனிடையே இந்தியா முழுவதும் தியேட்டர்களை நிர்ணயிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக பிவிஆர் 2024 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.130 கோடி நஷ்டத்தை சந்த்துள்ளது. கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.333 கோடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. அதேபோல் பி.வி.ஆர். ஐநாக்ஸின் வருவாய் ரூ.1,143 கோடியில் இருந்து ரூ.1, 256 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் வருவாய் ரூ.3,751 கோடியில் இருந்து ரூ.6,107 கோடி ஆக எகிறியுள்ளது. 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு 2025 ஆம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களை ஒட்டுமொத்த வருவாயை உயர்த்த பிவிஆர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சரியாக செயல்படாமல் இருக்கும் சுமார் 70 தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளது. மேலும் சரியாக மக்கள் எதிர்பார்க்கும் இடங்களில் 120 தியேட்டர்களை திறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தங்களுடைய கவனம் தென்னிந்தியாவின் சந்தையில் அதிகளவில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. 

கடன் இல்லாமல் இருப்பது இலக்கு:

சுமார் 25% அளவில் செலவீனத்தை குறைக்கும் வகையில் வாடகை ஒப்பந்தங்கள் மற்றும் செயல்பாட்டு செலவீனங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் கடன் இல்லாமல் இருப்பது இலக்கு என தெரிவித்துள்ளது. இதற்காக மூவி பாஸ்போர்ட் என்ற ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் வார நாட்களில் மக்களை தியேட்டருக்கு அழைத்து வர திட்டம் போடப்பட்டுள்ளது. 

மேலும் ஏற்கனவே உள்ள சினிமா லவ்வர்ஸ் டே என்ற புதிய திட்டத்தையும் விரிவுப்படுத்த உள்ளது. இதன் மூலம் தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. பிவிஆர் நிறுவனத்தின் இந்த முடிவு சந்தையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
Embed widget