மேலும் அறிய

போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!

மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது; தமிழகத்தில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது – மதுரையில் பேட்டி.

போலி புத்தகங்கள் தயாரித்து நூலகங்களுக்கு வழங்கி திமுகவினர் ஊழல் செய்துள்ளனர். – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

புத்தகத் திருவிழா 2026
 
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை அமைச்சர் நிர்மல்குமார், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த அரங்குகளைப் பார்வையிட்டதுடன், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்து அவர்களைப் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது..," மதுரையில் தற்போது புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினர் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் டெலிபோன் டைரக்டரி, டிக்ஷனரி உள்ளிட்ட புத்தகங்களைக்கூட ஜெராக்ஸ் எடுத்து புத்தகங்களாகத் தயாரித்து நூலகங்களுக்கு வழங்கியுள்ளனர். நமது ஆட்சியில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. காலங்காலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நூலகங்களில் கலைஞர் நூலகம், பெரியார் நூலகம் எனப் பெயர்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டவர்கள் தற்போது சிக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான புத்தகங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
 
ஆதாரங்களுடன் பேச வேண்டும்.
 
கடந்த காலங்களில் பணம் கொடுத்து வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதைப் போல இல்லாமல், நமது ஆட்சியில் தகுதியான நபர்கள் மட்டுமே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவார்கள். இடஒதுக்கீடு தொடர்பான புகார் குறித்து திருமாவளவனிடம் நிச்சயமாகப் பேசுவேன். பேசிய பின்னர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைத் தெரிவிக்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் திமுகவினர் தொடர்ந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை வைத்து எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க முடியாது. ஜெம் கிரானைட் வீரமணி விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. இந்த விவகாரம் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிந்திருந்தும் குற்றவாளிகள் தப்பிக்க உதவியிருந்தால் அவரும் குற்றவாளிதான். தற்போது பெரியார் நூலகம் தொடர்பான விவகாரத்தையும் திமுகவினர் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன என்பதற்காக அவற்றையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆதாரங்களுடன் பேச வேண்டும்.
 
தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியுள்ளோம்.
 
தீபாவளி பண்டிகையின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எங்களது அமைச்சர் தரவுகளுடன் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், அதையும் திமுகவினர் திசைதிருப்பி வருகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது காவல்துறையினருக்கு அரசியல் குறுக்கீடுகள் இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக ஆளுநரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, நாங்கள் எந்த அறிக்கையும் வழங்கவில்லை. இதுகுறித்து எனக்குத் தெரியாது. தேவைப்படும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார். தற்போது அவர் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகிறார் என்றார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியுள்ளோம்.
 
மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது
 
திமுகவினர் பணத்தை வைத்துக்கொண்டு மக்களைச் சந்தித்ததைப் போல நாங்கள் வரவில்லை. முதலமைச்சரின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி மக்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, நிச்சயமாக இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசு அடாவடியாகச் செயல்பட்டால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த கணவன்! ஆத்திரத்தில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!
கள்ளக்காதலை கண்டித்த கணவன்! ஆத்திரத்தில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!
பழனி திருஆவினன்குடியில் களைகட்டிய முகூர்த்த நாள்! திருமணம், காதுகுத்து வைபவங்கள் கோலாகலம்!
பழனி திருஆவினன்குடியில் களைகட்டிய முகூர்த்த நாள்! திருமணம், காதுகுத்து வைபவங்கள் கோலாகலம்!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி (13.11.2026) விலை: இன்றைய நிலவரம் இதோ!
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி (13.11.2026) விலை: இன்றைய நிலவரம் இதோ!
மதுரை தனிஷ்க் நகை கொள்ளை: 10 கிலோ தங்கம் மாயம்! 'ட்ரையல்' பார்த்த மர்மன்; காவல்துறை திணறல்!
மதுரை தனிஷ்க் நகை கொள்ளை: 10 கிலோ தங்கம் மாயம்! 'ட்ரையல்' பார்த்த மர்மன்; காவல்துறை திணறல்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
Embed widget