மேலும் அறிய

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் 'கார்த்திகை தீபம்'.

பழைய பகையாளி:

 இந்த சீரியலில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வரப்போகிறது. குறிப்பாக, சாமுண்டீஸ்வரியின் பழைய பகையாளியாக ஸ்ரேயா என்ட்ரி கொடுத்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

இதயம் கொடுத்தவர்களைப் பார்க்க ஆசைப்படும் சாமுண்டீஸ்வரி:

அருணின் இதயத்தை அம்மாவுக்கு பொருத்திய விஷயத்தை முன்பே தன்னிடம் சொல்லியிருக்கலாமே என்று ரேவதி, கார்த்திக்கிடம் வருத்தப்படுகிறார். அதற்கு கார்த்திக், "நீங்க எதை நினைச்சும் வருத்தப்படாதீங்க, எல்லாத்தையும் நாம பார்த்துக்கலாம்" என்று சொல்லி ரேவதியைச் சமாதானப்படுத்துகிறார்.

இதற்கிடையில், வீட்டுக்கு சோகமாக வரும் சாமுண்டீஸ்வரி, தனக்கு இதய தானம் செய்த அந்தக் குடும்பத்தை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்று ரேவதியிடம் சொல்கிறார். ஆனால், அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், ஊருக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றும் சொல்லி சமாளிக்கிறார்கள்.

சமாளிக்கும் கார்த்திக்:

இதைக் கேட்ட சாமுண்டீஸ்வரி, "அப்படின்னா போன்லயாவது பேசணுமே" என்று கேட்கிறார். உடனே கார்த்திக் கொடுத்த நம்பருக்கு போன் செய்ய வைக்கிறார். போனை எடுக்கும் கார்த்திக், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாதிரியே பேசுகிறார்.

"அருண்னு ஒருத்தர் இறந்துட்டாரு. அவரோட இதயம்தான் உங்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கு. நாங்க ஊருக்கு வந்ததும் கண்டிப்பா உங்களை நேர்ல வந்து பார்க்கிறோம்" என்று சொல்லி கார்த்திக் சமாளிக்கிறார்.

மறுபக்கம், வில்லன்களான சிவனாண்டியும் சந்திரகலாவும் வழக்கம்போல அடுத்ததாக என்ன பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரேயா என்ட்ரி:

இந்த நேரத்தில் சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்க, தினேஷுக்கு ஒரு போன் வருகிறது. தன்னுடைய அக்கா ஸ்ரேயாவை அழைத்து வருவதற்காக தினேஷ் ஏர்போர்ட்டுக்குச் செல்கிறார்.

அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில், சாமுண்டீஸ்வரியைப் பற்றி ஸ்ரேயாவிடம் தினேஷ் பெருமையாகப் பேசிக்கொண்டே வருகிறார். முதலில் யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரேயா, அந்தப் பெண்ணின் பெயர் சாமுண்டீஸ்வரி என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

சாமுண்டீஸ்வரி – ஸ்ரேயா இடையே வெடித்த பழைய பகை!

வீட்டுக்கு வரும் ஸ்ரேயாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்க சாமுண்டீஸ்வரி வருகிறார். ஆனால், ஸ்ரேயாவைப் பார்த்த அடுத்த நொடியே சாமுண்டீஸ்வரிக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது.

"நீயா? எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து" என்று சாமுண்டீஸ்வரி கேட்கிறார். ஆனால், ஸ்ரேயாவோ வந்ததுமே கோபத்தில் வெடிக்கிறார்.

"என் வாழ்க்கையையே கெடுத்தவள் நீதானே! இப்போ உன் பொண்ணை என் தம்பிக்குக் கல்யாணம் செய்து வைத்து இருக்கியா? உன்னை மறுபடியும் நேர்ல பார்ப்பேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. இனிமே என் தம்பி இங்கே இருக்கவே மாட்டான்" என்று சாமுண்டீஸ்வரியை கடுமையாகத் திட்டிவிட்டு, தினேஷை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

உண்மையைத் தேடிப் புறப்பட்ட கார்த்திக்!

ஸ்ரேயா இப்படி கோபப்பட்டு தினேஷை அழைத்துச் சென்ற விஷயத்தை மயில் ஓடிப்போய் கார்த்திக்கிடம் சொல்கிறார். இதைக் கேட்ட கார்த்திக் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறார்.

"சாமுண்டீஸ்வரிக்கும் ஸ்ரேயாவுக்கும் அப்படி என்ன பழைய பிரச்சனை இருக்கும்? எதுக்காக இவ்வளவு கோபப்படுறாங்க?" என்று யோசிக்கும் கார்த்திக், இதற்கான உண்மையைத் தெரிந்துகொள்ள ஸ்ரேயாவும் தினேஷும் இருக்கும் வீட்டுக்கே நேரில் செல்கிறார்.

மறுபக்கம், சாமுண்டீஸ்வரிக்கும் தனக்கும் இடையே இருக்கும் பழைய பகையைப் பற்றி ஸ்ரேயா தனது தம்பி தினேஷிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சரியாக அந்த நேரத்தில் கார்த்திக் அங்கே வந்து நிற்கிறார்.

அப்படி என்ன பகை?

இனி ஸ்ரேயாவிடம் கார்த்திக் என்ன கேட்கப் போகிறார்? சாமுண்டீஸ்வரிக்கும் ஸ்ரேயாவுக்கும் இடையே இத்தனை வருடங்களாக இருக்கும் பகை என்ன? சாமுண்டீஸ்வரியின் கடந்த காலத்தில் மறைந்திருக்கும் அந்த அதிர்ச்சி ரகசியம் என்ன? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget