கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
Assam Accident: லாரியும், மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்.

அசாம் மாநிலத்தில் உலக புகழ் பெற்ற வனவிலங்கு சரணாலயமான காசிரங்காவில் போகாக்கட்டிலில் இருந்து நாகோன் பகுதிக்கு மினி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோங்காஜன் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மினி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
23 பேர் பலி
இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார், மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















