மேலும் அறிய

watch video |ஷூட்டிங் ஸ்பாட்டில் அல்லு அர்ஜூன் கொடுத்த அட்வைஸ்...வைரலாகும்’புஷ்பா’ மேக்கிங் வீடியோ!

“ எனக்கு ஒரு சின்ன கோரிக்கை...நாம ரொம்ப காலமா இந்த பகுதியில் ஷூட்டிங் பண்ணிட்டு வர்றோம் ...”

தெலுங்கில் முக்கிய பிரபலமாக இருந்து வரும் அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்தான் ‘புஷ்பா’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். முன்னதாக படத்தின் புகைப்படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கின. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகாவின் மாறுபட்ட தோற்றங்கள் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியது. கொரோனா ஊரடங்கு காலத்தால் தள்ளிப்போன படங்களுள் ‘புஷ்பா’ திரைப்படமும் ஒன்று. இதனால் படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என கதாநாயகன் , இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் தினமும் 20 மணி நேரம் ஓயாது உழைத்து வருகின்றனர் எனவும் செய்திகள் வெளியானது. படம் வருகிற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் , புஷ்பா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராம்பச்சோடாவரம் மற்றும் மரேடுமில்லி என்னும்  அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்த வீடியோவில் அல்லு அர்ஜூன் மைக்கை பிடித்துக்கொண்டு தனது படக்குழுவிடன் பேசுகிறார் “ எனக்கு ஒரு சின்ன கோரிக்கை...நாம ரொம்ப காலமா இந்த பகுதியில ஷூட்டிங் பண்ணிட்டு வற்றோம் ... அதனால் நாம பயன்படுத்தின பிளாஸ்டிக் பாட்டில் , கப்ஸ், பேப்பர் எதுவாக இருந்தாலும் , குப்பைத்தொட்டியில போட்டோமா என்பதை  தயவு செய்து சரிப்பார்த்துக்கொள்ளுங்கள்!  நாம முதன் முதலாக நுழைந்த பொழுது எவ்வளவு சுத்தமாக இந்த இடம் இருந்ததோ ..அதே போலத்தான் திரும்ப செல்லும் பொழுதும் இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட  அவரது ரசிகர்கள் அல்லு அர்ஜுனின் சமூக சிந்தனையை கொண்டாடி வருகின்றனர். புஷ்பா படத்தின் டிரைலர் இன்று மாலை 6.03 மணியளவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் செம்மரக்கட்டையை கடத்தும் லாரி ஓட்டுநராக புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறார். பஹத் பாசில் வில்லனாக நடிக்க இவர்களுடன் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன், கிஷோர், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீதேஜ் ஆகியோர் நடிக்கின்றனர். சமந்தா குத்துபாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார். படம் தமிழ் , தெலுங்கு , இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget