![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pushpa 2 Stampede : ”நாங்க உடைஞ்சு போயிட்டோம்” புஷ்பா2-ஆல் உயிரிழந்த பெண்.. கலங்கி பேசிய அல்லு அர்ஜூன்
Allu Arjun : ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.
![Pushpa 2 Stampede : ”நாங்க உடைஞ்சு போயிட்டோம்” புஷ்பா2-ஆல் உயிரிழந்த பெண்.. கலங்கி பேசிய அல்லு அர்ஜூன் Pushpa 2 Stampede allu arjun announces 25 lakhs relief for revathi's family willing to do any help Pushpa 2 Stampede : ”நாங்க உடைஞ்சு போயிட்டோம்” புஷ்பா2-ஆல் உயிரிழந்த பெண்.. கலங்கி பேசிய அல்லு அர்ஜூன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/06/07a59d546f6c0637116e60ccf0732e7a1733502694010313_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் அப்பெண்ணின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 :
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வியாழனன்று புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது, இந்த நிலையில் நேற்று முன்தினம்(05.12.2024)வெளியானது, அந்த வகையில் அப்படத்தின் சிறப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்தது. அப்போது அந்த திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் வந்துள்ளனர்.
அப்போது அல்லு அர்ஜூனை காண ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது, அப்போது ஏற்ப்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 வயதான ரேவதி என்கிற பெண்மணியும் அவரது 9 வயது மகனும் கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டனர், அதில் ரேவதி பரிதாபமாக உயிரிழந்த அவரது மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Pragya Nagra : இணையத்தில் கசிந்த படுக்கை அறை வீடியோ... இந்த முறை ஜீவா பட நடிகையா ?
அல்லு அர்ஜூன் இரங்கல்:
தற்போது இச்சம்பவத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது இரங்கல் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹைதராபாத்தில் உள்ள ஆர்டிசி கிராஸ்ரோடில் புஷ்பாவின் பிரீமியரைப் பார்க்கச் சென்றபோது, அடுத்த நாள் இதுபோன்ற சோகமான செய்தியைக் கேட்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு குடும்பம் காயமடைந்ததாகவும், ரேவதி என்ற பெண் இறந்ததை கேள்விப்பட்டவுடம் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்ப்பது ஒரு நேசத்துக்குரிய சடங்கு, ஆனால் இந்த சம்பவம் நம் அனைவரையும் மனவேதனைக்கு உள்ளாக்கியது,"
நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துக்கத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையில் அவர்கள் தனியாக இருக்கவில்லை, குடும்பத்தை நேரில் சந்திப்பார்கள் என்று உறுதியளிக்க விரும்புகிறேன். அவர்களின் தேவைக்கு மதிப்பளித்து. துக்கப்படுவதற்கான இடம், இந்த சவாலான பயணத்தில் செல்ல அவர்களுக்கு உதவக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்"
25 லட்சம் நிதியுதவி:
தெலுங்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். உயிரிழிந்த பெண்ணின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் கருத்தில் கொண்டு ₹ 25 லட்சம் வழங்குவதாக அவர் கூறினார். துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எந்த உதவிகளையும் செய்ய எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர் என்றார்.
மேலும் மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்கும் வகையில் திரைப்படங்களைத் தயாரிக்கிறோம் என்று கூறிய அவர், மக்கள் திரைப்பட கொண்டாட்டங்களில் கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
Deeply heartbroken by the tragic incident at Sandhya Theatre. My heartfelt condolences go out to the grieving family during this unimaginably difficult time. I want to assure them they are not alone in this pain and will meet the family personally. While respecting their need for… pic.twitter.com/g3CSQftucz
— Allu Arjun (@alluarjun) December 6, 2024
வழக்குப்பதிவு:
இதற்கிடையில் இச்சம்பவம் காரணமாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் பிரிவுகள் 105, 118(1) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) r/w 3(5) BNS ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)