மேலும் அறிய

இனி தமிழ்நாட்டிற்குதான் வரணும்.... கொதிக்கும் புதுச்சேரி ரசிகர்கள்; வெளியான அதிர்ச்சி தகவல் !

புதுச்சேரியில் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் 25 % கேளிக்கை வரி, 18 சதவீத வரிவிதிப்பை கண்டித்து ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை

இந்தியாவில் கேளிக்கை வரி என்பது, நாட்டில் அதிக அளவில் வெளியாகும் திரைப்படங்கள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரியாகும், மேலும் மொத்த வசூல், பெரிய வணிக நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களில் இருந்து குறைக்கப்படுகிறது. கேளிக்கைவரி கழித்த பிறகு வரும் தொகை நிகரம் என அழைக்கப்படுகிறது.

புதுச்சேரியில் 25% கேளிக்கை வரி, 18% GSTவரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைபடங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போதுவரை அமலில் உள்ளது.

தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லை

புதுச்சேரியில் ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உள்ளாட்சித்துறை செயலரை அழைத்து நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் வருகின்ற ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்களை வெளியிட போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்து விட்டனர். ஆனால் புதுச்சேரயில் 25 சதவீதம் என்பது ஏற்புடையது அல்ல. பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள் பல மூடபட்டு வருகிறது. 18 திரையரங்கிற்கு மேல் மூடிவிட்டார்கள். எனவே, தமிழகத்தை போல கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு குறைக்க வேண்டும். இது நியாயமான கோரிக்கை தான், இதனை அரசு செய்து தரும் என நம்புகிறோம். ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்கள் இல்லை என விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் எந்த தேதி என அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இனி சினிமா கேரவன்களுக்கு சாலை வரி

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் கேரவன், கேம்பர் வேன்கள் தற்காலிக வரி கட்ட வேண்டும். இலகு, நடுத்தர கேரவன், கேம்பர் வேன்கள் 3 நாட்கள் சினிமா, விளம்பர சூட்டிங் எடுக்க ரூ.860, கனரக வாகனங்கள் ரூ.1,340 சாலை வரி செலுத்தி அனுமதி பெற வேண்டும். 7 நாட்களுக்கு இலகு நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.1,800, கனரக வாகனங்களுக்கு ரூ.2,800 எனவும், 30 நாட்களுக்கு இலகு, நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.4,200, கனரக வாகனங்களுக்கு ரூ.8,800 எனவும் வரி செலுத்த வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget