மேலும் அறிய

Provoke Awards 2023: கலைத்துறையில் சாதனை.. எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 4 பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது.

கலைத்துறையில் சாதனை படைத்த அலர்மேல்வள்ளி, எஸ்.வி.சேகர், அரவிந்தாக்‌ஷன், ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

கலைத்துறையில் சாதனைபடைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ப்ரவோக் கலைத்திருவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சமத்துவம் எனும் தலைப்பில் இசைக்கச்சேரி நடத்தி பார்வையாளர்களை கவர்ந்திழுத்தார்.

 நாட்டியக் கலைஞரான பத்மஸ்ரீ லீலா சாம்சன் அகத்தீ எனும் தலைப்பில் நடன விருந்து படைத்தார். மேலும் ஓ.எஸ் அருணனின் ஸ்பந்தமாத்ரிகா நடனநிகழ்ச்சி, முத்துசாமி தீட்சிதர் உருவாக்கிய குமுதக்ரியாவில் அர்த்தநாரீ எனும்  சிவ பார்வதி நடனம், ரேவதி, மதுவந்தி மற்றும் கல்யாண வசந்தம் ஆகிய ராகங்களில் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் மேஸ்ட்ரோ லால்குடி ஜி.ஜெயராமன் இசையமைத்த தில்லானா இசைக்கச்சேரி ஆகியவை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. 

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, கலை வடிவங்களுக்காக உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை படைத்த  பத்ம பூஷன் அலர்மேல் வள்ளி, கலைமாமணி எஸ்.வி.சேகர், கணபூஷணம் வி.ஏ.அரவிந்தாக்ஷன் மற்றும் டி.ராதாகிருஷ்ண ஸ்தபதி ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொழிலதிபரும் டோனி அண்டு கை அழகுநிலைய நிறுவனருமான சாம்பால் மற்றும் அஸ்வினி சாம்பால் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.

விருது பெற்றபின் உரையாற்றிய எஸ்.வி. சேகர், கலைத்துறையில் இயங்கிகொண்டு இருக்கும்போதே விருது பெறுவது வரம் என்றும், இயங்கி முடித்த பின் வழங்கினால் அது ஓய்வூதியம் என்றும் குறிப்பிட்டார்.  தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். 

பல்வேறு வேறுபாடுகள் நிறைந்தது இந்தியா எனவும், அதனை நாம் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறிய அன்புமணி இராமதாஸ், இந்த நிகழ்ச்சியில் தகுதி உடையவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றார். நவீனத்துவம், முதலாளித்துவம் உள்ளிட்டவற்றை பின்பற்றும் இளைய தலைமுறையினர் நமது கலை, பண்பாடு உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூசுந்தர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது சாதாரண விஷயமல்ல என்றும் கூறினார். தலைசிறந்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
மாணவர்களுக்கு பாராட்டு விழா.. அதிகாலையிலேயே மண்டபத்துக்கு வந்த தவெக தலைவர் விஜய்
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Kamalhaasan Salary : அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
அடேங்கப்பா! இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசன் வாங்கிய சம்பள பணம் இவ்வளவா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Embed widget