கார்த்திக்கால் அழிந்தவர்கள் அதிகம்.. கேரக்டர் ரொம்ப மோசம்.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை!
சினிமாவில் இருக்கும் எந்த சங்கத்திற்கும் கார்த்திக் கட்டுப்படமாட்டார். அவருக்கு அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்பெஷல் ரூம் இருக்கும். அங்கு ஷூட்டிங் வராமல் அட்மிட் ஆகி விடுவார்.

தனிப்பட்ட முறையில் நடிகர் கார்த்திக்கின் கேரக்டர் மிக மோசம் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நவரச நாயகனுக்கு வந்த சோதனை
மறைந்த பழம்பெரும் நடிகரான எஸ்.பி.முத்துராமனின் மகனான கார்த்திக் 1980,1990களின் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். நவரச நாயகன் என்ற அடைமொழியோடு இன்றளவும் அழைக்கப்படுகிறார். இப்படியான கார்த்திக் ஒருகட்டத்தில் வில்லன், குணச்சித்திரகேரக்டரில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் சமீபத்தில் கார்த்திக்கால் தான் பாதிக்கப்பட்ட கதையை ஒரு நேர்காணலில் தெரிவிக்க தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பு கிளம்பியது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கார்த்திக் பற்றி பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம். ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நடிகர் கார்த்திக் பற்றி பேசப்படும் விஷயங்கள் இப்போது தோன்றியவை அல்ல. பல காலமாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள். 1985 முதல் 1995 ஆம் ஆண்டு வரை அவருக்கென மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது. மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியிருந்தார். பெண்களுக்கெல்லாம் அவர் மீது மிகப்பெரிய அளவில் அன்பு இருந்தது. அவரை கண்டாலே பின்னால் துரத்தி செல்லும் செல்லும் அளவுக்கு பெண் ரசிகைகளை பெற்றிருந்தார்.
தனிப்பட்ட கேரக்டர் மோசம்
ஆனால் தனிப்பட்ட முறையில் கார்த்திக்கின் கேரக்டர் ரொம்ப மோசம் என சொல்லலாம். பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் யாரையும் மதிக்க மாட்டார். ஒரே நேரத்தில் 10 தயாரிப்பாளர்கள் அவரை வைத்து பணம் தயாரிக்க முன் வந்தால் அனைவரிடமும் அட்வான்ஸ் வாங்கி கொள்வார். அப்போது அவர் சம்பளம் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மட்டுமே இருந்தது.
அவரை சந்தித்தால் முதலில் பணத்தை தான் பெற்றுக் கொள்வார். அதன்பிறகு கதை கேட்பார், சூப்பரா இருக்கு, எப்போ, எங்கே ஷூட்டிங் என எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார். சிட்பண்ட் கம்பெனி தொடங்கி மக்களிடம் படம் வசூலித்து விட்டு ஓடி விடும் கதையை கேள்விப்பட்டிருப்போம். எல்லாரும் பணம் போய்விட்டதே என புலம்பி ரோட்டில் வந்து நிற்பார்கள். அந்த மாதிரி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி வைத்து விட்டு பின்னர் அதன்படி நடக்காதது ஒன்றும் புதிது கிடையாது.
அவரால் அழிந்தவர்கள் அதிகம்
100 தயாரிப்பாளர்கள் கார்த்திக்கை வைத்து படம் எடுத்திருந்தால் அத்தனை பேரையும் அவர் கஷ்டம் தான் படுத்தியிருந்தார். ஒருவரை கூட மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கார்த்திக்கை வைத்து சக்கரவர்த்தி என்ற படம் எடுத்தோம். அதில் எந்தளவுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ செய்தார். அந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ரூ.7 லட்சம் செலவில் செட் போட்டு பாடல் காட்சி எடுக்க கார்த்திக்கிற்காக காத்திருக்கிறோம்.
அவர் வரவே இல்லை. அந்த நாள் முழுக்க வரவில்லை. கார்த்திக்கை நாம் போனில் கூட தொடர்பு கொள்ள முடியாது. அவருக்கு போன் செய்தால் யாருமே போன் எடுக்க மாட்டார்கள். வீட்டுக்கு போய் பார்த்தால் அவர் உள்ளே இருந்துக் கொண்டு வெளியே பூட்டி விட்டு போக சொல்லி விடுவார். 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்து விட்டு டார்ச்சர் செய்தார். காலை 7 மணிக்கு ஷூட்டிங் சொன்னால் இரவு 7 மணிக்கு வருவார்.
சினிமாவில் இருக்கும் எந்த சங்கத்திற்கும் கார்த்திக் கட்டுப்படமாட்டார். அவருக்கு அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்பெஷல் ரூம் இருக்கும். உடல்நிலை சரியில்லை என சொல்லி அந்த அறையில் சென்று அட்மிட் ஆகி விடுவார். சினிமா தொழிலில் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கார்த்திக் அது செட்டாகவில்லை. அவரால் அழிந்த தயாரிப்பாளர்கள் அதிகம்




















