Empuraan Review : மாஸ் , கிளாஸ் , ஆக்ஷன்... மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் விமர்சனம்...
Empuraan Twitter Review : பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள L2 - Empuraan படத்தின் சமூக வலைதள விமர்சனங்களைப் பார்க்கலாம்

எம்புரான்
பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடித்துள்ள படம் எம்புரான். 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. உலகளவில் உள்ள மோகன்லால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். முன்பதிவுகளில் மட்டு ஒரு நாளில் 50 கோடிக்கு மேலாக வசூல் சாதனை படைத்துள்ளது எம்புரான் திரைப்படம். எம்புரான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் படத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சர்வதேச கடத்தல் மாஃபியா குரேஷி ஏப்ரகாம் தான் மோகன்லால் என முதல் பாகம் முடியும் . தற்போது தனது சொந்த ஊர் கேரளாவில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடி வருகையில் மோகன்லால் இதனை எப்படி கையாள்கிறார் என்பதே எம்புரான் படத்தின் கதை.
எம்புரான் முதல் பாதி விமர்சனம்
படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் உலகதரத்தில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். முதல் பாதி முழுவது கதையையும் கதாபாத்திரங்களையும் கட்டமைப்பதற்கான நேரத்தை படம் எடுத்துக் கொள்கிறது. இடைவேளைக் காட்சி ரசிகர்களுக்கு ஒரு திரையரங்க விருந்தாக அமைந்துள்ளத என்று தெரிவித்துள்ளார்கள்
#Empuraan First Half - DECENT So far👍
— AmuthaBharathi (@CinemaWithAB) March 27, 2025
First half primarily focused on Character & story building 🤝
Mohanlal Entry & Interval block are so good & filled with peak elements 🔥 pic.twitter.com/Dx9Yz2Szn1
மோகன்லால் இண்ட்ரோ காட்சி
எம்புரான் படத்தில் மோகன்லால் நடித்துள்ள காட்சிகள் மொத்தமே 40 நிமிடம் தான் என படக்குழு முன்பே தெரிவித்திருந்தது. அந்த வகையில் படம் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின்பே மோகன்லால் வருகிறார். மோகன்லாலின் இண்ட்ரோ காட்சிக்கு திரையரங்கில் எல்லா பக்கமும் விசில் பறக்கிறது. #Empuraan – Lalettan enters after an hour, but the theater erupts like he walked in with an Oscar. 🥵🔥 Hollywood-level stunts, Mollywood-level wait time. 😂 #L2Empuraan#Empuraan pic.twitter.com/zdi5OeFQwn
— Indian Circus (@Indiancircuss) March 27, 2025
எம்புரான் விமர்சனம்
நிதானமாக செல்லும் முதல் பாதியைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஆக்ஷனை நோக்கி நகர்கிறது இரண்டாம் பாதி. எம்புரான் படத்தைப் பொறுத்தவரை அரசியலை மையப்படுத்தி எழுதப்பட்ட மிக தெளிவான திரைக்கதையை முரளி கோபி எழுதியுள்ளார். படத்தின் காட்சியமைப்புகளும் ஸ்டண்ட் காட்சிகளும் மிக தரமாக உருவாகியுள்ளன. ஆனால் பிருத்விராஜின் இயக்கம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். ஹாலிவுட் படங்களின் வழக்கமான கதை சொல்லும் பாணியை இப்படத்தில் அவர் பின்பற்றியிருப்பதாகவும் இதில் தனித்துவமானது என குறிப்பிட்டு சொல்ல எதும் இல்லை என சில ரசிகர்கள் கருதுகிறார்கள்