‘Adolescence’ நெட்ஃபிளிக்ஸில் சாதனை!
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள பிரிட்டிஷ் தொடர் அடலசென்ஸ்.நான்கு எபிசோட்கள்.
ஜேமி மில்லர் என்கிற 13 வயது சிறுவன் தனது பள்ளியில் படிக்கும் சக மாணவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான். 13 வயது சிறுவன் ஏன் கொலை செய்ய வேண்டும் ? சமூக காரணிகளை விரிவாக ஆராய்கிறது.
சமூக வலைதளங்களின் பயன்பாடு, பெற்றோர்களின் நடத்தைகள் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்து தாக்கமும் அவற்றின் விளைவாக அரங்கேறும் குற்றமும் என பல கோணங்களை எதார்த்தமாக கையாள்கிறது இந்த தொடர்.
ஜேமி, சக மாணவர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறான். இதை அவன் பெற்றோர்களிடன் சொல்லவில்லை. ஜேமியின் தந்தை ஒரு சாதாரண பிளம்பர். தனது மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறார். ஆனால் தனது மகன் என்ன மன நிலையில் இருக்கிறான், செல்ஃபோனில் அவன் என்ன பார்க்கிறான் என்பது பற்றி துளியும் அவர் அறிந்திருக்கவில்லை.
13 வயதிலிருந்து 16 வயதுக்குள்ளான குழந்தைகள் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ளதால் அபாயகரமான சிக்கல்களை ஏற்படுத்துவதாக பிரிட்டன் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு வெப் சீரிஸ் என்றும் சொல்லலாம்.
முழுக்க முழுக்க உரையாடல்களில் நகரும் கதை;சலிப்பை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஜேமியின் உளவியலை தெரிந்துகொள்ள அவனுடம் ஒரு மன நல மருத்துவர் பேசுவதே 3 ஆவது எபிசோட். மிக நுட்பமான அணுமுறையுடன் ஜெமியில் இந்த நிலைக்கான காரணம் பற்றி புரிந்துகொள்ள முயற்சியாக ..
இந்த சீரிஸில் அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் மற்றொரு காரணம் ஒவ்வொரு எபிசோடும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப் பட்டவை
ஒவ்வொரு எபிசொட்டிற்கு ஒரு நாள் வீதம் ஐந்து நாட்களின் 4 எபிசோட்களை எடுத்து முடித்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக பல நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள்.
நெட்ஃபிளிக்ஸில் லிமிடெட் சீரிஸ் பிரிவில் வெளியான தொடர்களில் அதிக பார்வையாளர்களை எட்டியுள்ளது. இந்த சீரிஸ் வெளியாக இரண்டு வாரங்களில் 66.3 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. இதற்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
பெற்றோர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய சீரிஸ் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.