மேலும் அறிய

Kalki 2 : விரைவில் தொடங்கும் கல்கி 2-ஆம் பாகம் படப்பிடிப்பு...ரிலீஸ் எப்போ தெரியுமா?

பிரபாஸ் நடித்து ரூ.1000 கோடி வசூலீட்டிய கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

கல்கி

 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான படம் கல்கி. அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , துல்கர் சல்மான் , பசுபதி , அனா பென் , மிருணால் தாக்கூர் , ராஜமெளலி  , விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைஜயந்தி மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

மகாபாரத கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவான இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. பிரபாஸ் நடித்த முந்தைய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்த நிலையில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் கல்கி படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 1000 கோடி வசூல் ஈட்டியது. இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய ஒரே படம் கல்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கதை ரீதியாக மட்டுமில்லாமல் தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய மைல்கல்லை கல்கி படம் எட்டியுள்ளது. முழுக்க முழுக்க கற்பனையான உலகத்தை உருவாக்கி அதை தொழில் நுட்பத் தேர்ச்சியோடு படம் கையாண்டதற்காக இயக்குநர் நாக் அஸ்வின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் சேர்த்து நாக் அஸ்வினை பலர் ஒப்பிட்டு பேசியும் வருகிறார்கள். 

கல்கி 2

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்துள்ளார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் ஈடுபட்டுள்ளார். திரைக்கதை பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் 3 ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2028 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

முந்தைய பாகத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறைவாகவே இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க கமல் முக்கிய வில்லனாக நடிக்க இருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகமளித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget