50 கோடியை திருப்பிக் கொடுத்தார்...பிரபாஸ் செயலை பாராட்டிய தயாரிப்பாளர் ராஜன்...
வசூல் ரீதியாக தனது படம் தோல்வியை சந்தித்ததும் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு தனது சம்பளத்தை திரும்பிக் கொடுத்ததற்காக நடிகர் பிரபாஸை தயாரிப்பாளர் கே ராஜன் புகழ்ந்துள்ளார்

கொரோணா நோய் தொற்று பரவலுக்குப்பின் ஓடிடி வருகையைத் தொடர்ந்து ஸ்டார்களின் மார்கெட் இரு மடங்கு அதிகரித்துள்ளது. சராசரியாக 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் 150 கோடி அந்த படத்தின் நாயகனுக்கு சம்பளமாக அளிக்கப்படுகிறது. தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை படத்தின் ரிலீஸூக்கு முன்பே சேட்டலைட் , ஓடிடி விற்பனையில் போட்ட பணத்திற்கும் மேல் லாபம் பார்த்துவிடுகிறார்கள். ஒரு பெரிய ஸ்டார்களின் படங்கள் எதிர்பார்த்த வசூல் ரீதியான வெற்றிபெறவில்லை என்றால் அப்படத்தின் விநியோகஸ்தர்களே பெரியளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சில நடிகர்கள் படத்தின் தோல்விக்கான முழு பொறுப்பை தாங்களே எடுத்துக் கொண்டு தங்களால் முடிந்த நஷ்ட ஈடு வழங்குகிறார்கள். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் இதை செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதே போல் தெலுங்கில் நடிகர் பிரபாஸ் , ராம் சரண் உள்ளிட்ட பலரும் இதை கடைபிடித்து வருகிறார்கள்.
சம்பளத்தை திருப்பிக் கொடுத்த பிரபாஸ்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ராஜன் நடிகர் பிரபாஸை முன்னுதாரணமாக சுட்டிகாட்டி பேசினார். " ராதே ஷியாம் படத்திற்கு பிரபாஸ் 100 கோடி சம்பளம் வாங்கினார். படம் தோல்வி அடைந்தது தெரிந்ததும் தயாரிப்பாளர் வீட்டிற்கு போய் தனது சம்பளத்தில் இருந்து 50 கோடியை பிடித்து விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படி சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர் மறுத்துள்ளார். ஒரு நடிகரின் மார்கெட் வேல்யூவை வைத்து தான் விநியோகஸ்தர்கள் ஒரு படத்தை வாங்குகிறார்கள். அந்த படத்தின் வெற்றி மட்டுமில்லை தோல்வியும் என்னுடைய பொறுப்பே என்று பிரபாஸ் கூறி தனது சம்பளத்தில் இருந்து 50 கோடியை விநியோகஸ்தர்களுக்கு திருப்பிக் கொடுத்தார். "
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ராதே ஷியாம். பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்தார். பிரம்மாண்டமான மாஸ் படங்களை ரசிகர்கள் பிரபாஸிடம் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ரொமாண்டிக் படமாக இப்படம் உருவாகியது ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
த ராஹா சாப்
தெலுங்கி பிரபாஸ் நடித்துள்ள த ராஜா சாப் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் மாளவிகா மோகனன் , நிதி அகர்வால் , ரித்தி குமார் , சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளார்கள். மாருதி இப்படத்தை இயக்கியுள்ளார்.





















